எர்மேன் சுத்ரூவ
பால்ட்டிக் செருமானிய வானியலாளர்
கார்ல் எர்மேன் சுத்ரூவ (Karl Hermann Struve, அக்டோபர் 3, 1854 – ஆகத்து 12, 1920) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் கெர்மான் ஆத்தோவிச் சுத்ரூவ (Герман Оттович Струве) அல்லது கெர்மான் ஆத்னோவிச் சுத்ரூவ (Герман Оттонович Струве) என அழைக்கப்பட்டார்.
எர்மேன் சுத்ரூவ | |
---|---|
எர்மேன் சுத்ரூவ | |
பிறப்பு | சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு | அக்டோபர் 3, 1854
இறப்பு | ஆகத்து 12, 1920 பாட் எரெனால்ப், செருமனி | (அகவை 65)
தேசியம் | பால்ட்டிக் செருமானியர் |
துறை | வானியலாளர் |
பணியிடங்கள் | புல்கோவோ வான்காணகம் (1882–1895) கோனிக்சுபெர்க் வான்காணகம் பெர்லின் வான்காணகம்(1904–1920) |
கல்வி கற்ற இடங்கள் | தோர்பத் பல்கலைக்கழகம் |
விருதுகள் | அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1903 |
எர்மேன் சுத்ரூவ சுத்ரூவக் குடும்ப வானியலாளர்களில் ஒருவர். இவரது தாத்தா பிரீட்ரிக் ஜார்ஜ் வில்கெல்ம் வான் சுத்ரூவ; இவரின் தந்தையார் ஆட்டோ விகெல்ம் வான் சுத்ரூவ; இவரது அண்ணன் உலூத்விக் சுத்ரூவ; இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பு (nephew) ஆட்டோ சுத்ரூவ ஆவார்.