எர்லிச்மேனைட்டு

சல்பைடு கனிமம்

எர்லிச்மேனைட்டு (Erlichmanite) என்பது OsS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓசுமியம் சல்பைடு கனிமமாகக் கருதப்படும் இது இயற்கையிலேயே தோன்றுகிறது. உலோகப் பளபளப்புடன் சாம்பல் நிறத்தில் 5 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பும், 9 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் கொண்டு இக்கனிமம் படிகமாகிறது.[1] வண்டல் செயல்முறைகளின் போது குறிப்பிட்ட மூலப் பாறையிலிருந்து ஈர்ப்பு விசையால் பிரிக்கப்பட்ட உயர் உலோக தாதுக்களின் படிகத் திரட்சியில் காணப்படுகிறது.[2] ஜோசப் எர்லிச்மேன், நாசா அமெசு ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரான் நுண்ணுயிர் ஆய்வாளரான இயோசப் எர்லிச்மேன் நினைவாகக் கனிமத்திற்கு எர்லிச்மேனைட்டு எனப் பெயரிடப்பட்டது.

எர்லிச்மேனைட்டு
Erlichmanite
பொதுவானாவை
வகைபைரைட்டு
வேதி வாய்பாடுOsS2
இனங்காணல்
மோலார் நிறை254.33கிராம்
படிக இயல்புபைரிடோமுகப் படிகங்கள்
படிக அமைப்புசமநீளம்
மோவின் அளவுகோல் வலிமை4.5-5.5
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி8.28
அடர்த்தி8.28 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது), 9.59 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)
Extinction
பொதுவான மாசுகள்இரிடியம், ரோடியம், உருத்தேனியம், பலேடியம்

பன்னாட்டு கனிமவியல் சங்கம் எர்லிச்மேனைட்டு கனிமத்தை Erl[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Erlichmanite".
  2. "Erlichmanite Mineral Data".
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்லிச்மேனைட்டு&oldid=4146032" இலிருந்து மீள்விக்கப்பட்டது