எறிச்சலூர்
கோனாட்டு எறிச்சலூர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள எரிச்சி[1] என்னும் ஊர்தான் சங்ககாலக் கோனாட்டு எறிச்சலூர். இதனை டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.[2] இவ்வூரில் வாழ்ந்த புலவர் மாடலன். இவர் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரை மதுரைக் குமரனார் என வழங்கலாயினர். புறநானூறு இவரது வரலாற்றை உணர்த்தும் வகையில் ‘கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்’ என்று குறிப்பிடுகிறது.
- கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவரது பாடல்கள் புறநானூற்றில் ஆறு பாடல்களும் பாடல் எண் (54, 61, 167, 180, 197, 394).
- திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல், பாடல் எண் 25 இடம்பெற்றுள்ளது.
- பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
- தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
- அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
- திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.
- என்ற பாடல் திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ளது.
விளக்கம்:திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ "எரிச்சி". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-28.
- ↑ புறநானூறு 167 அடிக்குறிப்பு.