எலிசபெத் ஜான்சன்

எலிசபெத் ஜான்சன் (Elizabeth Johnson) அல்லது இரெனால்ட்சு எனப்படுபவர் (8 ஜூலை 1721 - 14 மே 1800) ஓர் ஆங்கிலேயச் சிறுநூல் வெளியீட்டாளர். இவர் 1714 இல் இயற்றப்பட்ட நெட்டாங்கு சட்டப் பரிசையும் பாராட்டையும் வெல்ல முயன்றவர். இப்படி முயன்றவர்கள் இவரும் ஜேன் சுக்கொயர் மட்டுமே. இது அக்காலத்தில் புத்தியல் பெண்களுக்கு நிதிவழியிலும் கடல்சார் நிலையாகவும் அர்சு நுறைவழியிலும் அதுவரை உகவாத நிகழ்வாகும்.

எலிசபெத் ஜான்சன்

தொடக்கநிலைப் பின்னணி

தொகு

இவர் தெவோனில் உள்ள பிளிம்ப்டனில் சாமுவேல் இரெனால்டுசு வுக்கும் தியோபில்லாவுக்கும் பிறந்தார்.இவரது உடன்பிறந்தவர்களில் சர் யோசுவா இரெனால்டுசு சிறந்த ஓவியராவார். இவர் தன் தங்கையை ஓவியங்கள் வரைய படிமமாகப் பயன்படுத்தினார். இந்த ஓவியங்கள் பலபடிகள் எடுக்கப்பட்டுள்ளன.[1] பின்னர் இருவருக்கும் பிணக்கு, பணிவின்மை, இறையன்பு இன்மை, நிதிநெருக்கடி ஆகியவை குறித்து ஏற்பட்டுள்ளது.[2]

இவர்களுடன் பிறந்தவர்களில் மேரி பால்மர் எனும் ஆசிரியரும் பிரான்சிசு இரெனால்டுசுஎனும் வண்ணஓவியரும் அடங்குவர்.

மண வாழ்க்கை

தொகு

இவர் 1753 ஜனவரி 7 இல் வில்லியம் ஜான்சனைத் தெவோன், கிரேட் டாரிங்டனில் உள்ள புனித மைக்கேல் பேராயத்தில் மண்ந்தார்.

இவரது கணவர் குடும்பத்தை விட்டு வெளியேறும் முன் இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்துள்ளனர். பிறகு இவர் தன் வாழ்க்கையை தன் இலக்கியப் பணிகளைக் கொண்டே நகர்த்தியுள்ளார்.

வெளியீடுகள்

தொகு

எழிக்கியேல் குறித்த ஞானத்துக்கான விளக்கம் எனும் முதல் சிறுநூலில் இருந்து அனைத்து இவரது சமயச் சிறுநூல்களும் பெயர் இன்றியே 1781 இல் வெளியிடப்பட்டன. சமய நூலகளைப் பெண்கள் எழுதுவதை திறனாய்வு செய்யாமல் இருக்கவே இவ்வகை ஏற்பாட்டைப் பின்பற்றினார். இவரது சிறுநூல்களைப் பற்றி 1783 இல் ஒரு திறனாய்வாளர் பின்வருமாறு கருத்துரைத்துள்ளார்: "As the intentions of this writer are pious, his facilities evidently disordered, and his lucubrations absolutely unintelligible, these three pamphlets must be exempted from criticism." [3] நெட்டாங்கு குறித்து தேடிய அறியப்படாத பெண்கள் பரணிடப்பட்டது 2015-09-30 at the வந்தவழி இயந்திரம்</ref>

நெட்டாங்கு

தொகு

படைக்கப்பட்ட உலகின் வானியலும் புவிப்பரப்பியலும் (The Astronomy and Geography of the Created World),[1] எனும் தன் நான்காம் சிறுநூலை 1785 இல் வெளியிட்டார். இந்நூல் நெட்டாங்கு பற்றிய சிறுமேற்கோளை உள்ளடக்கியது. இந்தச் சிறுநூல் "that if the palm for finding the longitude, is not given to the author of the Explanation of the Vision to Ezikiel it will never be given to another" எனும் பெற்றியுடன் முடிகிறது. இந்த எழிக்கியேல் சிறுநூல் ஜான்சன் எழுதியது என் அண்மையில் அறியப்பட்டது. இந்த நூலின் ஆசிரியரான, நெட்டாங்கு தேடலுக்குரியவர் ஒரு பெண் என்பதும் விளங்கலானது.தேடிய அறியப்படாத பெண்கள்/[தொடர்பிழந்த இணைப்பு] என அவர் பெயர் குறிப்பிடமலே நெட்டாங்குக் குழுமத்துக்குப் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு 1786 இல் அனுப்பியுள்ளார் [2]. எனினும், தன் முயற்சியில் இவர் தோற்றார். இச்சிறுநூலும் குழுமதுக்கு இவர் எழுதிய கடிதமும் பின்னர் அரசு வானியலாளராகிய ஜான் ஏரியால் நெட்டாங்குக் குழுமம் சார்ந்த தொகுதியில் தொடர்பாடல்களின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டன . இதை இவர் 1858 இல் பகுத்தறிவுக்கு உகவாத வானியல் கோட்பாடுகள்[3] எனத் தலைப்பிட்டார். என்றாலும், இது மட்டுமே சமயத்தையும் நெட்டாங்கையும் பற்றிப் பேசிய சிறுநூல் அன்று.

இவர் 1800 இல் தெவோனிலுள்ள கிரேட் டாரிங்டனில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. National Portrait Gallery
  2. Wendorf, Richard (1998). Sir Joshua Reynolds: The Painter in Society. Cambridge, Mass: Harvard UP. pp. 67-68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-80966-1.
  3. Smollett, Tobias George, ed. (1783). The Critical Review, Annals of Literature LVI. p. 394.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_ஜான்சன்&oldid=4030011" இலிருந்து மீள்விக்கப்பட்டது