எலிபாசு பிளாடிசெபாலசு
எலிபாசு பிளாடிசெபாலசு புதைப்படிவ காலம்:சிபானியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | புரோபோசிடே
|
குடும்பம்: | |
பேரினம்: | எலிபாசு
|
இனம்: | எ. பிளாடிசெபாலசு
|
வேறு பெயர்கள் | |
பிளாடிசெபாசு பிளாடிசெபாலசு |
எலிபாசு பிளாடிசெபாலசு (Elephas platycephalus) என்பது ஆசிய யானைகளுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய தாவர உண்ணி வகையினைச் சேர்ந்த பாலூட்டிகளின் அழிந்துபோன சிற்றினமாகும். இது 130,000 மற்றும் 700,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிளீசுடோசீன் சகாப்தத்தில் வாழ்ந்தது.[1] இதனுடைய புதைபடிவங்கள் சிவாலிக் மலைகளின் மேல்பகுதிகளில் கிடைத்துள்ளன.[2]
வகைப்பாட்டியல்
தொகுகட்டுரையாளரும் ஆராய்ச்சியாளருமான வின்சென்ட் மாக்லியோ மற்றொரு சிற்றினமான மம்முதாசு மெரிடியோனலிசு (ஒத்த இனம் எலிபாசு பிளானிப்ரான்சு), எ. பிளாட்டிசெபாலசின் நேரடி மூதாதையர் எனச் சந்தேகம் கொள்கிறார். ஏனெனில் இரண்டு சிற்றினங்களும் ஒரே மாதிரியாகத் தோற்றமுடையன. இருப்பினும், மண்டை ஓட்டின் முன்பக்க-இணைப்பு பகுதி மற்றும் இரண்டு சிற்றினங்களின் மேல் கடைவாய்ப்பற்கள் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இரண்டு சிற்றினங்களும் வேறுபடுகின்றன என்று முடிவு செய்யப்பட்டது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Paul S. Martin, Richard G. Klein (1989). Quaternary Extinctions: A Prehistoric Revolution. University of Arizona Press. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816511006.
- ↑ Xiaoming Wang (2013). Fossil Mammals of Asia: Neogene Biostratigraphy and Chronology. Columbia University Press. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231520829.
- ↑ Avinash Nanda (2002). Skull characteristics of two proboscideans from the Upper Siwalik Subgroup of Nepal. Neues Jahrbuch fur Geologie und Palaontologie - Abhandlungen. பக். 22.