எலிபன்டிடே

Deuterostomia

எலிபேன்டிடே (Elephantidae) என்பது யானை, மாமூத் போன்ற பாரிய தாவரஉண்ணி விலங்குகளை உள்ளடக்கிய ஓர் உயிரியல் குடும்பம் ஆகும். இக்குடும்ப விலங்குகள் அனைத்தும் தரைவாழ் உயிரினம் ஆகும். இத்துடன் இவற்றின் மூக்கு தும்பிக்கையாகவும் பல் தந்தங்களாகவும் காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு இனங்களும் தற்போது அழிந்துவிட்டன. தற்போது இக்குடும்பத்தச் சேர்ந்த லொக்சொன்டா எலிபாசு எனும் இரு பேரினங்களே வாழ்ந்து வருகின்றன. இக்குடும்பம் முதன் முதலாக 1821ஆம் ஆண்டில் ஜான் எட்வர்டு கிரேயினால் குறிப்பிடப்பட்டது.[2]

எலிபன்டிடே
புதைப்படிவ காலம்:Pliocene–Holocene
இந்தியாவின் பந்திப்பூர் தேசியப் பூங்கா வில் ஒரு ஆண் ஆசிய யானை (Elephas maximus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Superfamily:
குடும்பம்:
எலிபன்டிடே

Gray, 1821
மாதிரி இனம்
ஆசிய யானை
லின்னேயஸ், 1758
துணையினங்கள்[1]

வகைப்பாட்டியல்

தொகு

எலிபேன்டிடே குடும்பத்தின் அறிவியல் பூர்வ வகைப்பாடு, மில்லியன் கணக்கான ஆண்டுகளின், புதைபடிவ மாதிரிகளின் விரிவான பதிவை உள்ளடக்கியது. இவற்றில் சில கடந்த பனி யுகத்தின் இறுதி வரை இருந்தன. சில சிற்றினங்கள் சமீபத்தில் அழிந்துவிட்டன. புதிய மாதிரிகள் மற்றும் முன்மொழியப்பட்ட வகைப்பாட்டியல் கிளைக் கண்டுபிடிப்புகள் குடும்பம் மற்றும் தொடர்புடைய புரோபோசிடியன்களின் முறையான திருத்தங்களுக்கு வழிவகுத்தன.

யானைகள், யானைக் குடும்பம் என முறைசாரா முறையில் வகைப்படுத்தப்படுகின்றன அல்லது பழங்கால உயிரியல் சூழலில் யானைகள் மற்றும் மம்மூத் என வகைப்படுத்தப்படுகின்றன. யானை என்ற பொதுவான பெயர் முதன்மையாக வாழும் தற்கால யானைகளை, வகைப்பாட்டியல் குழுவினைக் குறிக்கிறது. ஆனால் இந்தக் குடும்பத்திலும் பிறவற்றிலும் அழிந்துபோன பல்வேறு சிற்றினங்களையும் குறிக்கலாம். எலிபேண்டிடேவின் மற்ற உறுப்பினர்கள், குறிப்பாக மம்மூத் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள், பொதுவாக மாமூத் என்று அழைக்கப்படுகின்றன.

மம்முடிடேயின் மாஸ்டோடான்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து குடும்பம் வேறுபட்டது. புரோபோசிடியன்களின் வகைப்பாடு நிலையற்றது மற்றும் அடிக்கடி திருத்தப்பட்டது.

பின்வரும் கிளை வரைபடம், 2007ஆம் ஆண்டு தொண்டை எலும்பு குணாதிசயங்கள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், பிற புரோபோசிடியன்களில் மம்மூத் பேரினத்தின் இடத்தைக் காட்டுகிறது.

எலிபேன்டிடே
எலிபேன்டினே
லோக்சோடோன்டினி

லோக்சோடோண்டா (2 சிற்றினங்கள்)  

  (ஆப்பிரிக்க யானைகள்)  
எலிபண்டினி
பாலியோலோக்சோடோண்டினா        

பேலியோலோக்சோடோன் 

எலிபாண்டினா
எலிபசு

(3~6 துணையினங்கள்)  

  (ஆசிய யானைகள்)  
மம்முதசு

 

  (மம்மத்சு)  

மேற்கோள்கள்

தொகு
  1. Shoshani, J.; Ferretti, M. P.; Lister, A. M.; Agenbroad, L. D.; Saegusa, H.; Mol, D.; Takahashi, K. (2007). "Relationships within the Elephantinae using hyoid characters". Quaternary International 169-170: 174. doi:10.1016/j.quaint.2007.02.003. Bibcode: 2007QuInt.169..174S. 
  2. Gray, John Edward (1821). "On the natural arrangement of vertebrose animals". London Medical Repository 15: 297–310. https://archive.org/details/londonmedicalre08unkngoog. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிபன்டிடே&oldid=3928226" இலிருந்து மீள்விக்கப்பட்டது