எலும்புத்தீவு

எலும்புத்தீவு அல்லது போன் தீவு (ஆங்கில மொழி: Bone Island) மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பல தீவுகளில் இதுவும் ஒன்றாகும். மிகச் சிறிய தீவான இது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.[1][2] உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை சிறிது கவரும் இடமாக உள்ளது. படகு மூலம் இதை சுற்றிப்பார்க்க சிறு தொகை அறவிடப்படுகிறது. மீனவர்கள் இதனை தற்காலிகமாக பாவிப்பதும் உண்டு.

எலும்புத்தீவு
Bone Island
என்புத்தீவு
தீவு
Bone Island, Batticaloa.jpg
எலும்புத்தீவு
நாடு  இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம்
பகுதி மட்டக்களப்பு வாவி
ஆள்கூறு 7°45′12″N 81°41′24″W / 7.75333°N 81.69000°W / 7.75333; -81.69000
அருகிலுள்ள நகர் மட்டக்களப்பு

உதவி அரசாங்க அதிபர் ஜே. ஏ. போன் (1833 - 1837),[3] இத்தீவில் ஒர் சிறிய வளமனையைக் கட்டியிருந்தார்.[4] அவருடைய பெயரை நேரடியாக என்புத் தீவு (எலும்புத்தீவு) என மொழிபெயர்த்ததால், பின்னர் இப்பெயரே நிலைத்துவிட்டது.

படங்கள்தொகு

உசாத்துணைதொகு

  1. "Batticaloa - Geography". மூல முகவரியிலிருந்து 2014-03-08 அன்று பரணிடப்பட்டது.
  2. Bone Island, in North Eastern, Sri Lanka
  3. "List of Former Government Agent". Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka). பார்த்த நாள் 31 March 2015.
  4. "Our Vision". Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka). மூல முகவரியிலிருந்து 2 ஏப்ரல் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்புத்தீவு&oldid=3236444" இருந்து மீள்விக்கப்பட்டது