எலும்புத் திண்மக் குறை
எலும்புத் திண்மக் குறை அல்லது எலும்பணுக் குறை (Osteopenia) என்பது எலும்பின் இயல்பான அடர்த்தி குறையும் நிலையாகும். பல மருத்துவர்களால், இது எலும்புப்புரை நோயின் முன் அறிகுறி என்று கருதப்படுகிறது. என்றாலும் எலும்பணுக் குறை கண்டறியப்படும் ஆனைத்து நபர்களுக்கும் எலும்புரை நோய் உண்டாவதில்லை. குறிப்பாக, எலும்பணுக் குறை என்பது எலும்பு கனிம அடர்த்தி டி-ஸ்கோரில் -1.0 மற்றும் -2.5 க்கு இடையில் இருப்பது என வரையறுக்கப்படுகிறது.[1][2]
காரணங்கள்
தொகுஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதாலும், பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைந்துவிடுவது போன்றவையும், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை, போதைப் பழக்கம் போன்றவற்றாலும் இது அதிகரிக்கலாம். பரம்பரை ரீதியும், கதிர்வீச்சுக்கு ஆட்படுதலின் விளைவும் ஒரு காரணி ஆகும்.[3]
இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்வது, வேகமாக நடப்பது, ஓடுவது, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்களின் எலும்பு அடர்த்தி பாதுகாக்கப்படுகிறது அல்லது அதிகரிக்கின்றது.[4][5][6]
இது பொதுவாக முதுமையின் அறிகுறியாகும். பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது.[7]
நோயறிதல்
தொகுஇந்த நோயை கண்டறிய டெக்சா ஸ்கேன் (Dexa Scan) பரிசோதனை முதன்மையாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனரைப் பயன்படுத்தியும் ஓரளவுக்கு கண்டறிவர், எக்ஸ்ரே இயந்திரத்தைப் பயன்படுத்தி குதிகால் எலும்பு அடர்த்தியை அளவிட இயலும். மெர்கெல்லால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், எலும்புப்புரையின் அளவை இது போன்ற இயந்திரங்கள் 28 முதல் 45 சதவிகிதம் என்று வேறுபடுத்திக் காட்டியது. [8]
சிகிச்சை
தொகுஇந்த நோயினால் வலு இழந்த எலும்பை மீண்டும் வலுப் பெறச்செய்ய இயலாது. ஆனால் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ மிகுந்த உணவுகளைச் சாப்பிடுதல் அல்லது அதற்கான மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் மற்ற எலும்புகளை வலிமையாக்கலாம். இவை தவிர, அண்மையில் இந்த நோய்க்கு நவீன மாத்திரைகளும் ஊசி மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ WHO Scientific Group on the Prevention and Management of Osteoporosis (2000 : Geneva, Switzerland) (2003). "Prevention and management of osteoporosis : report of a WHO scientific group" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-05-31.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "WHO — Fracture Risk Assessment Tool". Archived from the original on 2009-10-12. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.webmd.com/osteoporosis/tc/osteopenia-overview[full citation needed]
- ↑ "Bone mineral density in adolescent female athletes: relationship to exercise type and muscle strength". Med Sci Sports Exerc 34 (2): 286–94. February 2002. doi:10.1097/00005768-200202000-00017. பப்மெட்:11828239. https://archive.org/details/sim_medicine-and-science-in-sports-and-exercise_2002-02_34_2/page/286.
- ↑ "American College of Sports Medicine Position Stand: physical activity and bone health". Med Sci Sports Exerc 36 (11): 1985–96. November 2004. doi:10.1249/01.mss.0000142662.21767.58. பப்மெட்:15514517. https://archive.org/details/sim_medicine-and-science-in-sports-and-exercise_2004-11_36_11/page/1985.
- ↑ "Participation in road cycling vs running is associated with lower bone mineral density in men". Metab. Clin. Exp. 57 (2): 226–32. February 2008. doi:10.1016/j.metabol.2007.09.005. பப்மெட்:18191053.
- ↑ "Bone mineral affection in asymptomatic adult patients with celiac disease". Am. J. Gastroenterol. 89 (12): 2130–4. December 1994. பப்மெட்:7977227.
- ↑ Spiegel, Alix (21 December 2009). "How A Bone Disease Grew To Fit The Prescription". All Things Considered. https://www.npr.org/templates/story/story.php?storyId=121609815.
- ↑ டாக்டர் கு.கணேசன் (20 அக்டோபர் 2018). "எலும்புகள் வெயில் காயட்டும்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2018.