எலும்பு நோயெதிர்ப்பியல்
எலும்பு நோயெதிர்ப்பியல் (Osteoimmunology) என்பது எலும்புத் தொகுதி, நோயெதிர்ப்புத் தொகுதிகளுக்கிடையேயான இடைமுகப்பில் நிகழ்பவற்றைக் குறித்து அண்மைக் காலமாகப் (நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) ஆராயப்படும்[1][2] எலும்பு நோயெதிர்ப்பு அமைப்பைக்[3][4] குறித்துப் பயில்வதாகும். முதுகெலும்பிகளில் எலும்பு, நோயெதிர்ப்பு தொகுதிகளுக்கிடையேப் பகிர்ந்துக் காணப்படும் கூறுகள், இயங்கு முறைகள் (ஈந்தணைவிகள், ஏற்பிகள், சமிக்ஞை மூலக்கூறுகள், படியெடுக்கும் காரணிகள்) ஆகிவற்றைக் குறித்தும் எலும்பு நோயெதிர்ப்பியலில் பயிலப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் எலும்பு நோயெதிர்ப்பியலில் எலும்புப் புற்று, முடக்கு வாதம், எலும்புப்புரை, எலும்புத் தடிமன் நோய் (osteopetrosis), பல்சூழ்திசு அழற்சி (periodontitis) முதலிய நோய்களுக்கானச் சிகிச்சை முறைகள் ஆராயப்பட்டு வருகிறது. இரத்த உயிரணுக்கள், உடலின் வடிவ நோய்க்குறிகளுக்கிடையேயான மூலக்கூற்றுத் தொடர்பாடல்கள் குறித்த உறவுகளை எலும்பு நோயெதிர்ப்பியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ Arron JR, Choi Y (November 2000). "Bone versus immune system". Nature 408 (6812): 535–536. doi:10.1038/35046196. பப்மெட்:11117729.
- ↑ Walsh MC, Kim N, Kadono Y, et al (2006). "Osteoimmunology: interplay between the immune system and bone metabolism". Annu. Rev. Immunol. 24: 33 –63. doi:10.1146/annurev.immunol.24.021605.090646. பப்மெட்:16551243.
- ↑ Lorenzo J, Horowitz M, Choi Y (June 2008). "Osteoimmunology: interactions of the bone and immune system". Endocr Rev 29 (4): 403–440. doi:10.1210/er.2007-0038. பப்மெட்:18451259.
- ↑ Lorenzo J, Choi Y (2005). "Osteoimmunology". Immunol. Rev. 208: 5–6. doi:10.1111/j.0105-2896.2005.00340.x. பப்மெட்:16313336.
- ↑ McHugh K (2008). "Osteoimmunology in skeletal cell biology and disease". Autoimmunity 41 (3): 181–182. doi:10.1080/08916930701694808. பப்மெட்:18365830.