எல்சென்போர்ன் முகடு சண்டை
எல்சென்போர்ன் முகடு சண்டை (Battle of the Elsenborn Ridge) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இச்சண்டையில் ஆர்டென் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த எல்சென்போர் முகட்டை நாசி ஜெர்மனியின் படைகள் கைப்பற்றாமல் அமெரிக்கப் படைகள் பாதுகாத்தன.
எல்சென்போர்ன் முகடு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி | |||||||
எல்சென்போர்ன் முகட்டில் அமெரிக்க பீரங்கி நிலை |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா 1வது, 2வது, 9வது, 99வது அமெரிக்கத் காலாட்படை டிவிசன்கள் | ஜெர்மனி 12வது பான்சர் (கவச) டிவிசன் 3வது பான்சர் கிரேனிடியர் டிவிசன் 277வது, 12வது, 246வது வோல்க்ஸ் கிரேனிடயர் டிவிசன்கள் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வால்டர் ராபர்ட்சன் | ஹுகோ கிராஸ் | ||||||
பலம் | |||||||
28,000 | 56,000 | ||||||
இழப்புகள் | |||||||
5,000 (மாண்டவர் மற்றும் காணாமல் போனவர்) | 114 கவச சண்டை ஊர்திகள் அதிகமான எண்ணிக்கையில் படைவீரர்கள் |
ஐரோப்பிய மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடித்து ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்ற டிசம்பர் 1944 அன்று ஜெர்மானியப் படைகள் பல்ஜ் தாக்குதலைத் தொடங்கின. பல்ஜ் போர்முனையின் வடகளத்தின் ஒரு பகுதி எல்சென்போர்ன் முகடு. இதனைக் கட்டுப்படுத்துவோர் ஆண்ட்வெர்ப் நகருக்குச் செல்லும் தரைவழிச் சாலைப் பிணையத்தைக் (road network) கட்டுப்படுத்த இயலுமென்பதால், இம்முகட்டைக் கைப்பற்றுவது ஜெர்மானியர்களுக்கு அவசியமானது. டிசம்பர் 16ம் தேதி எல்சென்போர்ன் முகட்டை ஜெர்மானியப் படைகள் தாக்கின. அடுத்த பத்து நாட்கள் கடும் சண்டை நடைபெற்றாலும் ஜெர்மானியர்களால் முகட்டைக் கைப்பற்ற முடியவில்லை. முகட்டைப் பாதுகாத்த அமெரிக்கப்படைகளும், தாக்கிய ஜெர்மானியப் படைகளும் சரிநிகர் பலத்துடன் இருந்ததால், பத்துநாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. இறுதியில் பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் இம்முகட்டைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிட்டனர். இச்சண்டையில் இருதரப்புக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் ஜெர்மானியர்கள் தங்கள் இழப்புகளை ஈடுகட்டும் நிலையில் இல்லை. ஜெர்மனி தனது எஞ்சியிருந்த கடைசி இருப்புப் படைகளை பல்ஜ் சண்டையில் ஈடுபடுத்தியிருந்தது. எனவே இச்சண்டையின் இழப்புகளால் அமெரிக்கர்களை விட ஜெர்மானியர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருந்தது.