எல்தோசு பால்

இந்திய தடகள விளையாட்டு வீரர்

எல்தோசு பால் (Eldhose Paul) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேரளாவிலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கோதமங்களத்திலுள்ள மார் அத்தனாசியசு கல்லூரியில் படித்தார். இந்தியாவின் சார்பாக மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறார்.[3] 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டியில் மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.[4] இப்போட்டியில் இவர் தாண்டிய 17.03 மீட்டர் தொலைவே இவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும். 2023 ஆம் ஆண்டு புடாபெசுட்டு நகரத்தில் நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டிகளில் இவர் பங்கேற்றார். இப்போட்டியில் 15.59 மீட்டர்கள் தாண்டி 17 ஆவது இடத்தைப் பிடித்தார்.

எல்தோசு பால்
Eldhose Paul
2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் எல்டோசு பால்
தனிநபர் தகவல்
பிறப்பு7 நவம்பர் 1996 (1996-11-07) (அகவை 28)
எர்ணாகுளம், கேரளம், இந்தியா
Alma materமார் அத்தனாசியசு கல்லூரி, கோதமங்கலம் தேசிய மாணவர் படை [1]
விளையாட்டு
நிகழ்வு(கள்)மும்முறை தாண்டுதல்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)17.03 மீட்டர் (பொதுநலவாய விளையாட்டுகள்- 2022)[2]
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் மும்முறை தாண்டுதல்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பிரிம்மிங்காம் ஆண்கள் மும்முறை தாண்டுதல்

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்தோசு_பால்&oldid=3844517" இலிருந்து மீள்விக்கப்பட்டது