எல்மினா கோட்டை

எல்மினா கோட்டை என்பது, முன்னர் கோல்ட் கோஸ்ட் என்று அழைக்கப்பட்ட இன்றைய கானாவின் எல்மினாவில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டது. சாவோ ஜோர்ஜ் டா மினா (São Jorge da Mina) என்னும் பெயர் கொண்ட இக்கோட்டை 1482ம் ஆண்டில் கட்டப்பட்டது. கினியாக் குடாப் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் வணிக மையம் இதுவே. எனவே, சகாராவுக்குக் கீழே எஞ்சியுள்ள மிகப் பழைய ஐரோப்பியரின் கட்டிடம் என்ற பெயரையும் இது பெறுகிறது. முதலில் ஒரு வணிக மையமாகத் தொடங்கிய இது, பின்னர் அத்திலாந்திக் அடிமை வணிகப் பாதையில் ஒரு முக்கியமான தங்கும் இடமாகப் பயன்பட்டது. 1637ம் ஆண்டில் இக்கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றிய ஒல்லாந்தர், 1642ல் முழு கோல்ட் கோஸ்ட்டையும் கைப்பற்றினர். ஒல்லாந்தரின் கீழ் அடிமை வணிகம் 1814ம் ஆண்டுவரை தொடர்ந்து இடம் பெற்றது. 1872ல் ஒல்லாந்தரின் கீழிருந்த கோட் கோஸ்ட் முழுவதும் பிரித்தானியப் பேரரசின் கைக்கு மாறியது.[1][2][3]

எல்மினா கோட்டை

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்மினா_கோட்டை&oldid=3769266" இருந்து மீள்விக்கப்பட்டது