எல். இரேவணசித்தைய்யா

இந்திய காவல் பணி அலுவலர்

எல். இரேவணசித்தைய்யா (L. Revanasiddaiah) 1965 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி தொகுதியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் இந்திய காவல்துறை அதிகாரி ஆவார். கர்நாடக மாநில காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், காவல்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் மத்திய புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குநராகவும் பணியில் இருந்தார். 14-04-1997 முதல் 18-11-1999 வரை பெங்களூர் நகர காவல்துறை ஆணையராகவும் இருந்தார்.[1] காவல்துறை ரோந்துப் பிரிவுகளான ஒய்சால, மக்கள சகாயவாணி மற்றும் வனிதா சகாயவாணி ஆகிய குழந்தைகள் மற்றும் பெண்கள் உதவி மையங்களை அறிமுகப்படுத்துவதற்கு இவர் பொறுப்பேற்றார்.[2][3] தற்போது மனித கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இது துன்புறுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் குற்றவாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் சேவையில் ஈடுபடும் ஓர் அரசு சாரா அமைப்பாகும். இரேவணசித்தய்யா 1980 ஆம் ஆண்டில் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக முதலமைச்சரின் தங்கப் பதக்கத்தையும், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தையும், 1984 ஆம் ஆண்டு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கத்தையும் பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Past Commissioners of Bangalore City Policy". Bangalore City Police Commissionerate. Archived from the original on 19 July 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  2. "About L. Revanasiddaiah". Siddaganga Public School. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  3. "A family for life". Archived from the original on 18 August 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  4. "About L. Revanasiddaiah". Siddaganga Public School. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._இரேவணசித்தைய்யா&oldid=3740902" இலிருந்து மீள்விக்கப்பட்டது