எல். எம். மில்னி-தாம்சன்

எல். எம். மில்னி-தாம்சன் (Louis Melville Milne-Thomson, 1 மே 1891 – 21 ஆகத்து 1974) ஆங்கிலேய கணிதவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் பயன்பாட்டுக் கணிதத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். மில்னி-தாம்சன் வட்டத் தேற்றம் உட்படப் பல கணிதத் தேற்றங்களை இயற்றியுள்ளார்.[1][2]

லூயி மெல்வில் மில்னி-தாம்சன்
Louis Melville Milne-Thomson
பிறப்பு(1891-05-01)மே 1, 1891
ஈலிங்கு, இலண்டன், இங்கிலாந்து
இறப்புஆகத்து 21, 1974(1974-08-21) (அகவை 83)
கெண்ட், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைபயன்பாட்டுக் கணிதம், பாய்ம இயக்கவியல்
பணியிடங்கள்வின்ஸ்டர் கல்லூரி,
அரச கடற்படைக் கல்லூரி,
அரிசோனா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கிளிப்டன் கல்லூரி
கோர்ப்பசு கிறிஸ்டி கல்லூரி
அறியப்படுவதுமில்னி-தாம்சன் வட்டத் தேற்றம்

குலோனல் அலெக்சாண்டர், மில்னி தாம்சன் என்பவருக்கும் இவாமேரி மில்னி என்பவருக்கும் 1891 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் மில்னி தாம்சன். பிரிஸ்டலில் உள்ள கிளிப்டன் கல்லூரியில் தனது மூன்று வருட கல்லூரி படிப்பை தொடர்ந்தார். மில்னி தாம்சன் உதவித்தொகையுடன் கேம்ப்ரிட்ஜ் இல் பார்ப்பபஸ் கிறிஸ்டி. கல்லூரியில் 1909 இல் பயின்றார். 1913 இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் ரேங்க்லர் என்ற பட்டத்தை பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Batchelor, George Keith (1967). An introduction to fluid dynamics. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
  2. Croarken, Mary (2004). Dictionary of National Biography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._எம்._மில்னி-தாம்சன்&oldid=2903914" இலிருந்து மீள்விக்கப்பட்டது