எல். ஜெயசுதா

எல். ஜெயசுதா (L. Jaya Sudha) என்பவர் எல். ஜெயசுதா இலட்சுமிகாந்தன் என்றும் அழைக்கப்படுபவர் (பிறப்பு 19  சூன்  1975) இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போளூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்.[1]

ஜெயசுதா 1975ஆம் ஆண்டு சூன் 19ம் நாள் போளூரில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.[2]

References தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012.
  2. "Tmt. L. Jayasudha (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ஜெயசுதா&oldid=3776880" இலிருந்து மீள்விக்கப்பட்டது