எழிலகம் (Ezhilagam) தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐந்தடுக்குக் கட்டிடமாகும். இது சென்னைச் சேப்பாக்கப் பகுதியில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரில், காமராசர்ச் சாலையில் அமைந்துள்ளது. இதில் முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

எழிலகம்
Ezhilagam
எழிலகத்தின் முகப்புத்தோற்றம்
Map
பொதுவான தகவல்கள்
வகைஅரசு அலுவலக வளாகம்
இடம்சேப்பாக்கம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூற்று13°3′49″N 80°16′57″E / 13.06361°N 80.28250°E / 13.06361; 80.28250
உரிமையாளர்தமிழ்நாடு அரசு

அமைந்துள்ள முக்கியத் துறை அலுவலகங்கள் தொகு

இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

  • நில நிருவாகம்
  • பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்
  • மாநிலத் திட்ட ஆணையம்
  • பொது விநியோகம் மற்றும் நுகர்வோர்ப் பாதுகாப்பு
  • வணிக வரி
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல வாரியம்
  • வருவாய் நிருவாக ஆணையரகம்

விபத்து தொகு

2010 சூன் 15 அன்று இக்கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீப்பற்றியது. மின்கசிவே இத்தீவிபத்துக்குக் காரணமெனக் கருதப்பட்டது. 45 நிமிடங்களுக்குப் பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Fire at Ezhilagam building". The Hindu (Chennai: The Hindu). 16 June 2010 இம் மூலத்தில் இருந்து 12 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101112133919/http://www.hindu.com/2010/06/16/stories/2010061661920300.htm. பார்த்த நாள்: 27 Apr 2013. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழிலகம்&oldid=3365025" இலிருந்து மீள்விக்கப்பட்டது