எவ்ரி டே (திரைப்படம்)
எவ்ரி டே (Every Day) என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அமேரிக்க காதல் நாடகத் திரைப்படமாகும். இதை மைக்கேல் ச்ச்சியி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை டேவிட் லெவிடன் எழுதிய புதினக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் 16 வயது கொண்ட நாயகியாக ரையன்நானாவாக அந்தோரி ரைஸ் நடித்துள்ளார். டெபி ரியான், ஜஸ்டிஸ் ஸ்மித், மைக்கேல் க்ராம் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். படத்தின் நாயகி ஏ என்ற பெயருடைய ஒரு ஆத்மாவுடன் காதலில் விழுகிறாள், அந்த ஆத்மா ஒவ்வொரு நாளும் வேறுபட்ட உடலில் புகுந்து வரும் ஆன்மா ஆகும். இதனால் நாயகி ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான வாழ்வை வாழ்கிறார்.[1]
எவ்ரி டே Every Day | |
---|---|
இயக்கம் | மைக்கேல் சுசி |
தயாரிப்பு |
|
மூலக்கதை | எவ்ரி டே (நூல்) படைத்தவர் டேவிட் லெவிதன் |
திரைக்கதை | ஜெஸ்ஸி ஆண்ட்ரூஸ் |
இசை | எலியட் வீலர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரோஜர் ஸ்டோஃபெர்ஸ் |
கலையகம் |
|
விநியோகம் | ஓரியன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 23, 2018 |
நாடு | ஐக்கிய அமேரிக்க மாநிலம் |
மொழி | ஆங்கிலம் |
கதைச் சுருக்கம்
தொகுகூச்ச சுபாவம் கொண்ட பதின்ம வயதுப் பெண்ணொருத்தி காதல் கொள்கிறாள். ஆனால், தான் நேசிக்கும் காதலனுக்கும் அவனது அப்போதைய உடலுக்கும் தொடர்பில்லை எனத் தெரியவரும்போது அதிர்ச்சியடைகிறாள். அன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் புலரும்போதும் அவளைக் காதலிக்கும் ஆவி புதிய உடல் ஒன்றில் தனது நாளைத் தொடங்குகிறது. அவளுக்கு மட்டுமல்ல, அவளது காதலனான அந்த ஆவிக்கும் இந்த நாளை எந்த உடலில் புகுவோம் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆவியின் தேகப் பயணமும் அதைத் தேடும் அவளின் ஊகப் பயணமுமாக, ஒவ்வொரு நாளும் தங்களைப் புதிதாய்க் கண்டடைந்து காதலைக் கொண்டாடுகிறார்கள். ஆண், பெண், கறுப்பு, சிவப்பு, ஒல்லி, குண்டு என்று உடலின் அடையாளங்களைக் கடந்து தினசரி புதுப்புதிதாக சுவையாக தொடரும் நேசிப்பின் சுவாரசியமே, அவர்களின் காதலுக்கு எதிராகவும் உள்ளது.