எஸ். எம். சீனிவேல்

இந்திய அரசியல்வாதி

எஸ். எம். சீனிவேல் (S. M. Seenivel)(இறப்பு 25 மே 2016) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் 15ஆவது சட்டமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் முன்னதாக இதே தொகுதியில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தமிழ்நாட்டின் 13ஆவது சட்டமன்றத்திற்கு உறுப்பினராத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

சீனிவேல் 2016ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் இவரது வெற்றி அறிவிக்கப்படும் முன்னதாக பக்கவாத நோய்க்கு ஆளாகி மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு மே 25ஆம் நாள், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் நிகழ்விற்கு சில மணி நேரங்கள் முன்னதாக சிகிச்சையின் போதே இறந்தார்.[1] ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக மற்றொரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் மரியம் பிச்சை பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக இறந்து போனார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சீனிவேலுக்கு ஒரு மனைவியும், மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Newly elected AIADMK MLA dies of heart attack hours before oath-taking". Hindustan Times. 25 May 2016. http://www.hindustantimes.com/india/aiadmk-mla-seenivel-dies-of-heart-attack-hours-before-swearing-in-ceremony/story-kShJOsw94DZHmmT8691TeJ.html. பார்த்த நாள்: 2017-05-05. 
  2. "Seenivel is 2nd MLA to pass away on oath taking day in 5 yrs". The Indian Express. PTI. 25 May 2016. http://indiatoday.intoday.in/story/seenivel-is-2nd-mla-to-pass-away-on-oath-taking-day-in-5-yrs/1/676924.html. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._சீனிவேல்&oldid=4058155" இலிருந்து மீள்விக்கப்பட்டது