எஸ். எம். பாக்கர்
எஸ். எம். பாக்கர்(ஆங்கில மொழி: S.M.Backer) என்பவர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் வின் தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆவார். இவர் உடல் நலக்குறைவால் 2024 ஜூன் 20 சென்னையில் காலமானார்.[1]
எஸ். எம். பாக்கர் | |
---|---|
எஸ். எம். பாக்கர் | |
தாய்மொழியில் பெயர் | எஸ். எம். பாக்கர் |
தேசியம் | இந்தியர் |
பணி | ஊடகவியலாளர் |
இளமைக் காலம்
தொகுஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இவர் முதுநிலை கலைப்பட்டம் பெற்றவர்.
சமூகச் செயல்பாடுகள்
தொகுஇசுலாமியர்களுக்கான உரிமைகளைக் கேட்டு போராடி 1995 இல் தடா சட்டத்தில் கைதானார்.[2] இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்தார்.
அமைப்புகள்
தொகுதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர், தமுமுகவின் மாநில பொருளாளராகச் செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் சிலரோடு தனியாகப் பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார். பின்னர் அதிலிருந்து விலகி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் காலமானார்; முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் https://www.dailythanthi.com/News/State/indian-tawheed-jamaat-leader-bakar-passes-away-first-minister-mk-obituary-for-stalin-1110739". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/indian-tawheed-jamaat-leader-bakar-passes-away-first-minister-mk-obituary-for-stalin-1110739. பார்த்த நாள்: 30 June 2024.
- ↑ "S.M.Backer : மூத்த பத்திரிகையாளரும் மக்கள் உரிமைகளுக்காக போராடியவருமான எஸ்.எம்.பாக்கர் காலமானார்..!". ஏபிபிலைவ். https://tamil.abplive.com/news/chennai/s-m-backer-intj-state-leader-and-veteran-journalist-passes-away-189315. பார்த்த நாள்: 30 June 2024.