எஸ். எஸ். என். அரசு மேல்நிலைப் பள்ளி, கொம்மடிக்கோட்டை
கொம்மடிக்கோட்டை எசு. எசு. என். அரசு மேல்நிலைப் பள்ளி (S. S. N. Government Higher Secondary School, Kommadikottai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது. கொம்மடிக்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ள இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. பள்ளி நூலகத்தில் 2293 புத்தகங்கள் உள்ளன.
பிரிவுகள்
தொகுஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இங்கு கல்வி போதிக்கப்படுகிறது. 11 மற்றும் 12 வகுப்புகளில் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்கள் ஒரு பிரிவாகவும், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், கணிதம் என ஒரு பிரிவாகவும், கணினி பயன்பாடுகள், பொருளியல், வணிகவியல், கணக்கு பதவியல் என ஒரு பிரிவாகவும் மூன்று வகுப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.
சிறப்புகள்
தொகு2021 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் கொம்மடிக்கோட்டை எசு. எசு. என். அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த 9 ஆம் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சிறப்பிடம் பெற்றார்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கட்டுரைப் போட்டி:கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவி சிறப்பிடம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/mar/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88--%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3589666.html. பார்த்த நாள்: 1 May 2023.