எஸ். எஸ். ராமசுப்பு
எஸ். எஸ். ராமசுப்பு (பிப்ரவரி 11, 1950, ஆலங்குளம், திருநெல்வேலி)[1] என்பவர் இந்திய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் ஆவார்[2] [3][4] மேலும் 1989 மற்றும் 1991 தேர்தல்களில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5][6]
ராமசுப்புவின் தந்தை எஸ். சுடலைமுத்து நாடார் நெல்லை மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டார். ராமசுப்புவின் அரசியல் வாழ்க்கை 1972 இல் மாவட்ட மாணவர் காங்கிரசில் பணியாற்றியதன் வழியாக தொடங்கியது. வங்கியில் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் முழுநேர அரசியல்வாதியாக ஆனார்.
1989 ஆம் ஆண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் சதனித்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி குழு முடிவு செய்தது. ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட ராமசுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் அலடி அருணா மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு வென்றாா். ராமசுப்பு மீண்டும் 1991 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 32,000 வாக்குகளைப் பெற்றார்.
2009 பொதுத் தேர்தலில் இவர் திருநெல்வேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் இவர் 1,000 க்கும் அதிகமான கேள்விகளை கேட்டார். மேலும் மீனவர்கள் (நலன்புரி) மசோதா மற்றும் சிறப்ப கல்வி வசதிகள் மசோதா (வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கானது) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Detailed Profile: Shri S.S. Ramasubbu". National Informatics Centre. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
- ↑ "Details of Lok Sabha MPs: S.S. Ramasubbu". NIC, Government of India. பார்க்கப்பட்ட நாள் 21 May 2012.
- ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.