எஸ். கே. பத்மாதேவி
இந்திய நடிகை
எஸ். கே. பத்மாதேவி (S. K. Padmadevi, 1924 - 19 செப்டம்பர் 2019) [1] என்பவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்.
எஸ். கே. பத்மாதேவி | |
---|---|
பிறப்பு | 1924 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
இறப்பு | 19 செப்டம்பர் 2019 (95 வயது) பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1934 முதல் |
வாழ்க்கைத் துணை | பத்மநாப ராவ் |
1930 ஆம் ஆண்டு கன்னட நாடகத்துறையில் நுழைந்த பத்மாதேவி 1960 ஆம் ஆண்டு வரை மேடைகளில் சுறுசுறுப்பாக இயங்கினார். பின்னர் இவர் அகில இந்திய வானொலியில் இணைந்து இரண்டு தசாப்தங்கள் பங்களிதார். [2]
கலைவாணியின் “பக்த சுதாமா” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். “பக்த சுதாமா”வில் இவர் பாடிய “யதுகுலநந்தனனே” பாடல் அப்போது பிரபலமானது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் நாடக கலைஞரான பத்மநாப ராவை மணந்தார்.
திரைப்படவியல்
தொகு- சதி சுலோச்சனா (1934)
- பக்த துருவா (1934)
- சம்சார நௌகா (1936)
- கங்காவதார் (1942)
- மால்குடி டேஸ் (தொலைக்காட்சித் தொடர்) (1987)
விருது
தொகு2016 ஆம் ஆண்டில் கர்நாடக சலனச்சித்ர அகாடமியால் நிறுவப்பட்ட ஆர். நாகேந்திர ராவ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]