எஸ். கே. பரராஜசிங்கம்

எஸ். கே. பரராஜசிங்கம் (1936 - 28 மார்ச்சு 1999)[1] (கட்டுவன், யாழ்ப்பாணம்), இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும், மெல்லிசை, கர்நாடக இசைப் பாடகருமாவார். இலங்கை மெல்லிசை பிதா என்றறியப்படுபவர். சர்வதேச "உண்டா" விருதினைத் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர். தனது சகோதரரான வைத்தியகலாநிதி எஸ். கே. மகேஸ்வரன் உடன் இணைந்து கர்நாடக கச்சேரிகள் செய்திருக்கிறார். வானொலியில் "விவேகச் சக்கரம்" என்ற பொது அறிவு நிகழ்ச்சியை நடத்தியவர்.

எஸ். கே. பரராஜசிங்கம்

மெல்லிசைப் பாடல்கள் தொகு

இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் விளம்பர நிறுவனம் ஒன்றின் சார்பில் காவலூர் ராசதுரை தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இவரது பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதே இலங்கையில் தமிழ் மெல்லிசையின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது. இவரது மெல்லிசைப் பாடல்கள் 'ஒலி ஓவியம்' என்ற பெயரில் 1994ல் ஒலி நாடாவாக கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரனால் வெளியிடப்பட்டது. பின்னர் கனடாவில் 'குளிரும் நிலவு' என்ற தலைப்பில் அருவி வெளியீடாக குறுந்தட்டாக வெளிவந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. தம்பிஐயா தேவதாஸ் (2015). இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (முதல் ). கொழும்பு: வித்யாதீபம் பதிப்பகம். 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._பரராஜசிங்கம்&oldid=3774901" இலிருந்து மீள்விக்கப்பட்டது