எஸ். சித்தலிங்கையா

இந்தியத் திரைப்பட இயக்குநர்

எஸ். சித்தலிங்கையா (S. Siddalingaiah) (15 டிசம்பர் 1936 - 12 மார்ச் 2015) ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக கன்னடப் படங்களில் பணியாற்றினார். இவர் தனது தனித்துவமான திரைப்படத் தயாரிப்பு பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் இவரை சமூகக் கருப்பொருள்கள் மற்றும் கிராமப்புற விஷயங்களில் தேர்ச்சி பெற்றவராக தொழில்துறை அறிந்திருந்தது.[1] கன்னட திரையுலகில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற இயக்குநர்களில் இவரும் ஒருவர். 1964 ஆம் ஆண்டு மேயர் முத்தண்ணா (1969) படத்தின் மூலம் இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] 30 ஆண்டுகால வாழ்க்கையில், இவர் 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.[3]

சித்தலிங்கையா
Siddalingaiah
பிறப்பு15 திசம்பர் 1936
இறப்பு12 மார்ச்சு 2015 (வயது 78)
பெங்களூர், இந்தியா
தேசியம் இந்தியா
பணிஎழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1969–1999
வாழ்க்கைத்
துணை
தனலட்சுமி
பிள்ளைகள்முரளி (மூத்த மகன்)
சுரேஷ் (இளைய மகன்)
உறவினர்கள்அதர்வா (பேரன்)

இவரது மிகவும் பிரபலமான பல திரைப்படங்களில் ராஜ்குமார் நடித்திருந்தார். இவர்கள் 7 படங்களில் இணைந்து பணியாற்றினர். பங்காரடா மனுஷ்யா, பூதய்யனா மக அய்யு, நியாயவே தேவரு, பிலிகிரிய பனதல்லி, தூரத பேட்ட மற்றும் பூலோகதல்லி யமராஜா ஆகியவை இவரது மிகவும் பிரபலமான படைப்புகள்.[4] 1993 ஆம் ஆண்டில், இயக்குனராக கன்னடத் திரையுலகில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக புட்டண்ணா கனகல் விருது வழங்கப்பட்டது.[5]

இளமை வாழ்க்கை

தொகு

சித்தலிங்கைய்யா நவஜோதி ஸ்டுடியோ எனும் திரைப்பட அரங்கத்தில் பணியாளராகச் சேர்ந்தார். இயக்குநர் சங்கர் சிங்கிடம் உதவியாளராக பணியாற்றிய பின்னர், பி. விட்டலாச்சார்யாவின் உதவியாளராகவும் பணியாற்றினார்.

சித்தலிங்கையாவின் மூத்த மகன் முரளி தமிழ்த் திரைப்படங்களில் நடிகராக இருந்தார். இவரது பேரன் அதர்வாவும் தமிழில் நடிகராக இருக்கிறார்.

இறப்பு

தொகு

சித்தலிங்கையா 14 மார்ச் 2015 அன்று பெங்களூரில் இறந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Puttanna and Siddalingaiah – The Social Directors". Filmysphere.
  2. "History 51 – Siddalingaiah Enters Industry". Chitraloka.
  3. "Siddalingaiah at Belli Hejje". IndiaGlitz. Archived from the original on 24 September 2015.
  4. "Popular Hero Passes Away". Behindwoods.
  5. "SR Puttanna Kanagal Awards!". Supergoodmovies. Archived from the original on 22 ஆகத்து 2014.
  6. "Veteran Kannada film director Siddalingaiah dies". Indian Express. 12 March 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சித்தலிங்கையா&oldid=4169520" இலிருந்து மீள்விக்கப்பட்டது