எஸ். பி. சண்முகநாதன்

தமிழக அரசியல்வாதி

எஸ். பி. சண்முகநாதன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணிபுரிந்து இருக்கிறார். 2016 ஆண்டு இதேதொகுதியில் வெற்றிபெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] தமிழக அமைச்சரவையில் 2016 ஆகத்து 29 அன்று நடந்த மாற்றத்தில் சண்முகநாதன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சண்முகநாதன்&oldid=2801976" இருந்து மீள்விக்கப்பட்டது