எஸ். மோசேஸ்
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். (திசம்பர் 2016) |
எஸ். மோசேஸ் கிழக்கிலங்கை மட்டகளப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதுகளை பெற்றுள்ளார்.[சான்று தேவை] சமூக விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இவரது நாடகங்கள் தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிக்கான அரச தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ளது.[சான்று தேவை] 2005ம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடக நெறியாளருக்கான அரச தேசிய உயர் விருதினையும் இலங்கைப் பிரதமரிடமிருந்து பெற்றுள்ளார்.[சான்று தேவை]
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ் தயாரிப்பாளர் இவராவார்.[சான்று தேவை] 2012 முதல் இவரால் தயாரித்து, தொகுத்து வழங்கப்பட்டுவரும் 'இப்படிக்கு சட்டம்' என்ற சட்டம் தொடர்பான தமிழ் நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே புகழ்பெற்றது.[சான்று தேவை]
தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள்
தொகு- மனிதம்
- ஏக்கம்
- வாழையடி வாழை
- நியதி
- மாற்றம் (2009ம் ஆண்டின் தேசிய அரச உயர் விருது பெற்றது)
- புதுமைப்பெண் (2012ம் ஆண்டின் தேசிய அரச உயர் விருது பெற்றது)
- இறைவன் நம்மோடு,
- ஒரு சின்ன முத்தம்
நூல்கள்
தொகு- தொழிநுட்ப கலைகள்
- வெகுஜன ஊடகம்
- கலை இலக்கியக் கட்டுரைகள்
- தமிழின் கதை கூறும் மரபு
- இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள்
- வெகுஜன தொடர்பாடல்,
- தொலைக்காட்சி திரைப்பட தயாரிப்பும் முகாமைத்துவமும்,
- தொலைக்காட்சி திரைப்பட வானொலித் தொழினுட்பம்
- விளம்பரமும் மக்கள் தொடர்பாடலும்,
- ஊடகவியல் - பத்திரிகை சார் நெறிமுறைகள்,
- செய்தியியல்
- தொலைக்காட்சி செய்திகள்