எஸ். ரமேசன்

மலையாள எழுத்தாளர்

ரமேசன், கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும், இலக்கியவாதியும், இதழாளரும் ஆவார்.

எஸ். ரமேசன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

1952, பிப்பிரவரி 16 ல், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் பிறந்தார். எம் கே சங்கரன், பி லட்சுமி ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். பள்ளிபிரத்துச்சேரி செயிண்ட்.ஜோசப் எல் பி பள்ளி, வைக்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். சேர்த்தலை செண்ட். மைக்கேல் கல்லூரியில் இளநிலை பயின்றார். 1970 முதல் 1975 வரை எறணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி ஏ, எம் ஏ ஆகிய பட்டங்களை பெற்றார். மாத்ருபூமி நாளேட்டில் கவிதை எழுதியுள்ளார். 1976 ல் திருமணம் செய்தார். பேராசிரியர் டி பி லலா, இவரது மனைவி. சௌம்யா ரமேசு , சந்தியா ரமேசு இவரது மகள்கள்

விருதுகள்

தொகு
  • சிறுகாட் விருது - 1999 - கறுத்த குறிப்புகள் (கவித)
  • சக்தி விருது
  • எ பி களக்காடு விருது
  • முலூர் விருது

நூல்கள்

தொகு
  • சிதில சித்ரங்கள்
  • மல கயறுன்னவர்
  • எனிக்கு ஆரோடும் பகயில்ல (எனக்கு யாரோடும் பகையில்லை)
  • அஸ்தி சய்ய
  • கலுஷித காலம்
  • கறுத்த குறிப்புகள்
  • எஸ் ரமேசினது கவிதைகள்

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ரமேசன்&oldid=3371431" இலிருந்து மீள்விக்கப்பட்டது