எஸ். ராஜேஸ்வரன்

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி

எஸ். ராஜேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். எஸ். ராஜேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் பட்டியலில் இருந்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவர். இவரது சொந்த மாவட்டம் தஞ்சாவூர் ஆகும்.

எஸ். ராஜேஸ்வரன், உயர்நீதிமன்றநீதிபதி (ஓய்வு)
எஸ். ராஜேஸ்வரன், நீதிபதி (ஓய்வு), மதராசு உயர்நீதி மன்றம்
பிறப்புராஜேஸ்வரன்
Missing required parameter 1=month! , (-00-00) (அகவை 0)
தஞ்சாவூர், தமிழ் நாடு, இந்தியா
பணி
  • உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
அறியப்படுவதுநீதிபதி மதராசு உயர்நீதி மன்றம்
பட்டம்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தஞ்சாவூரில் பிறந்தார். அங்கு அவர் தனது பள்ளி படிப்பை முடித்த பின்னர், நீதிபதி எஸ். ராஜேஸ்வரன், தனது சட்டப் படிப்பை மதராசு சட்ட கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர், சட்டப் படிப்பை முடித்தவுடன், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கான பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

உயர்நீதி மன்றம்

தொகு
 
Manu Neethi Choozhan Statue at Madras High Court.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தார். பின்னர், சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

முக்கிய வழக்குகள்

தொகு

மெக்சிகோ குழந்தை வழக்கு

தொகு

எஸ். ராஜேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் போது அவர் முன்பாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 5 வயது குழந்தையின் பதுகாவலர் உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தங்களது 5 வயது குழந்தையை யார் பராமரித்து வளர்ப்பது என்ற கருத்து வேறுபாட்டால், அந்த குழந்தயின் தாயை குழந்தையின் தந்தை கொன்று சூட்கேசில் அடைத்து மறைத்தொழித்து விட்டதாகவும் வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ். ராஜேஸ்வரன், அந்த குழந்தையை டெல்லியில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவும் பின்னர் அந்த குழந்தை மெக்சிகோ நாட்டிற்கு அனுப்பப்பட்டு மெக்சிகோ நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உரிய பதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும் வரை மெக்சிகோ தூதரகம் கண்காணித்து வரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.[1]

ஜல்லிக்கட்டு கிளர்ச்சிக்கான விசாரணை ஆணையம்

தொகு

மாநிலத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து பல்வேறு சட்டம் மற்றும் ஒழுங்கு இடையூறுகளுக்கு வழிவகுக்கும் காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க, தமிழக முதல்வர் அறிவித்த விசாரணை ஆணையத்தின் தலைவராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ். ராஜேஸ்வரனை தமிழக அரசு நியமித்தது. ஜனவரி 23, 2017 ம் தேதியன்று, தமிழக ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ் ஓய்வு பெற்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை விசாரணை ஆணையத்திற்கு நியமித்தார். பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்ப்பட்ட சேதம் உள்ளிட்ட வன்முறைகள் குறித்து விசாரிக்க இந்த ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது.

மதுரையில் போரடியவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போராட்டங்களில் பங்கேற்ற மொத்தம் 179 எதிர்ப்பாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 64 பேர் அலங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். செல்லூர் போராட்டத்டில் 54 பேர்கள்மீதும், பெருங்குடி போராட்டத்தில் 34 பேர்கள் மீதும், மற்றும் திலகர் தீடலில் நடந்த போராட்டத்தில் 27 பேர்கள் மீதும் காவல் துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது.

வழக்குகளில் உள்ள 179 பேர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் பெயர்கள் மட்டும் இடம் பெறவில்லை. அதிகபட்சமாக, 20 மாவட்டங்களில் படித்து வேலை செய்யும் இளைஞர்கள் இங்கு வந்து போராட்டங்களில் பங்கேற்றனர். ஒவ்வொரு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அனைத்து 179 பேரும் ஒரே நேரத்தில் கூடிவந்தால் மட்டுமே, வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். ஆனால் அவ்வாறு 179 பேர்களும் சேர்ந்து வருவது சாத்தியமற்றது என்பதால் வழக்குகளுக்காக அவர்கள் நீண்டகாலம் அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.[2]

 
Jallikattu at Avaniyapuram, Madurai.

நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டம்

தொகு

தமிழ்நாடு நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டம், 1971 இன் 113-சி பிரிவை திறம்பட செயல்படுத்த சரியான வழிகாட்டுதல்களையும் விதிகளையும் வகுக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி திரு எஸ்.ராஜேஸ்வரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதன் மற்ற உறுப்பினர்களாக, 1. சென்னை நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆணையர், 2. உறுப்பினர் செயலாளர், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம், சென்னை, 3. தலைவர் பள்ளி கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் துறை, அண்ணா பல்கலைக்கழகம், 4. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம், சென்னை, ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "மெக்சிகோ குழந்தை வழக்கு".
  2. "காவல் துறை வழக்குகள்".

வெளி இணைப்புகள்

தொகு

ஜல்லிக்கட்டு[1]

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு [2]

  1. All about Jallikattu (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-03-30
  2. Jallikattu Gets Green Light In Tamil Nadu, But With Restrictions (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-03-30
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜேஸ்வரன்&oldid=3995447" இலிருந்து மீள்விக்கப்பட்டது