எஸ். வி. ராமகிருஷ்ணன்

எஸ். வி. ராமகிருஷ்ணன் (1936 - 9 பெப்ரவரி, 2011) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் 1940 களை ஒட்டிய தமிழ் வாழ்க்கையைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உயிர்மை, காலச்சுவடு,அமுதசுரபி,தினமணிக்கதிர் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது முதலாவது நூல் அவரது 70 ஆவது வயதளவிலேயே வெளியானது.

ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராம கிருஷ்ணன் சுங்கம் கலால் ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆணையராக ஓய்வு பெற்றார்.

மறைவு தொகு

ராமகிருஷ்ணன் 2011 பெப்ரவரி 9 அதிகாலை 5.45 மணியளவில் காலமானார்.

எழுதிய நூல்கள் தொகு

  • அது அந்தக் காலம் (உயிர்மை பதிப்பகம்)
  • வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._ராமகிருஷ்ணன்&oldid=2613661" இலிருந்து மீள்விக்கப்பட்டது