எஸ். வெங்கட்ராமன்

இந்திய அரசியல்வாதி

எஸ். வெங்கடராமன் (8 சனவரி 1903 - 17 நவம்பர் 1980) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1952-1962 வரை (3 ஏப்ரல் 1952 முதல் 2 ஏப்ரல் 1956 வரை மற்றும் 3 ஏப்ரல் 1956 முதல் 2 ஏப்ரல் 1962 வரை) இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.[1] இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்த இவர் 1946–1952 வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (டி.என்.சி.சி) செயலாளராகவும் பணியாற்றினார். [2] இவர் வேதாரண்யம் உப்பு சத்தியிகிரகத்தில் கலந்துகொண்டவர். [3] இவரது பெற்றொர் சுப்பிரமணிய ஐயர் (தந்தை), மதுராம்பாள் (தாய்) ஆகியோர் ஆவர். இவர் 1930 களின் பிற்பகுதியில் தமிழ் நாளிதழான ஜெய பாரதியின் ஆசிரியராக இருந்தார். இது சட்ட மறுப்பு இயக்கத்தின் போது ஒரு முக்கிய வெளியீடாக இருந்தது இதனால் ஆங்கிலேயர் ஆட்சியில் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய விடுதலை இயக்க செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக இவர் மொத்தம் எட்டு ஆண்டுகள் (இரண்டு சிறைத்தண்டனை) சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சென்னை மகாஜன சபையின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராசரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். 

எஸ். வெங்கடராமன், மாநிலங்களவை உறுப்பினர் (இடது) கு. கம்ராசர் (மதராஸ் மாநில முதல்வர்)- இருவரும் 1961 ஆம் ஆண்டில்

குறிப்புகள் தொகு

 

  1. "Rajya Sabha".
  2. "biograp_sketc_1f.htm - v.pdf" (PDF). Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
  3. A. Ganesan: The Press in Tamilnadu and The Struggle for Freedom 1917-1937. https://books.google.com/?id=cL7KVAqvSEYC&pg=PA145&lpg=PA145&dq=S.+Venkataraman+jayabharati#v=onepage&q=S.%20Venkataraman%20jayabharati&f=true. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வெங்கட்ராமன்&oldid=3162193" இலிருந்து மீள்விக்கப்பட்டது