எஸ் எம் எஸ் எம்டன் 22/09/1914 (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ் எம் எஸ் எம்டன் 22/09/1914 என்பது திவாகரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் வரலாற்றுப் புதினம். இது முதலாம் உலகப் போரின் போது 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று செருமனியப் போர்க்கப்பல் எஸ். எம். எஸ் எம்டன் (1906) சென்னை நகரின் மீது குண்டு போட்டதன் பின்னணியின் மீது எழுதப்பட்ட புதினம். 2009 ஆம் ஆண்டில் இது வெளிவந்தது.
எம்டன் கப்பல் சென்னையை 1914 செப்டெம்பர் மாதம் 22ஆம் நாள் இரவு தாக்கியது. 130 குண்டுகளை துறைமுகத்து எண்ணெய்த் தாங்கிகள் மீது வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது. இந்தப் பின்வாங்கலுக்கு காரணம் ஒரு இந்தியராக இருக்கலாமோ என்ற ஊகத்தை வைத்து இப்புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதினத்தில் வரும் பாத்திரங்கள் சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர்.