எ ஃபெண்டாஸ்டிக் வுமன்

எ ஃபெண்டாஸ்டிக் வுமன் (A Fantastic Woman (எசுப்பானியம்: Una mujer fantástica) என்பது 2017 ஆண்டைய சிலி நாட்டு ஸ்பானிய மொழித் திரைப்படம் ஆகும். இது லெலியோ மற்றும் கோன்சலோ மெஸா ஆகியோரால் எழுதப்பட்டு, செபாஸ்டியன் லியோலியோ இயக்கியத் திரைப்படமாகும்,[5]  படமானது ஜுவான் டி டியோஸ் மற்றும் பப்லோ லாரின் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. படத்தில் டேன்யாலா பேகா மற்றும் ஃபிரான்சிஸ்கோ ரேஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இது 67 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், கோல்டன் பியர் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[6] இது  90-வது ஆஸ்கர் விருது விழாவில் சிலியில் இருந்து சிறந்த வெளி நாட்டுத் திரைப்பட்ம் என்ற பிரிவில் போட்டியிட நுழைந்து[7]  சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது.[8]

எ ஃபெண்டாஸ்டிக் வுமன்
A Fantastic Woman
இயக்கம்செபாஸ்டியன் லியோலியோ
தயாரிப்பு
 • ஜுவான் டி டியோஸ் லாரின்
 • பப்லோ லேரெய்ன்
 • செபாஸ்டியன் லியோலியோ
 • கோன்சோ மாஜா
கதைசெபாஸ்டியன் லியோலியோ
கோன்சோ மாஜா
இசைமத்தேயு ஹெர்பெர்ட்
நடிப்புடேணியல் வேகா
பிரான்சிஸ்கோ ரியீஸ்
ஒளிப்பதிவுபெஞ்சமின் இக்சாரிடா
படத்தொகுப்புசோலேடட் சல்ஃபேட்
கலையகம்
 • Fabula
 • Komplizen Film
விநியோகம்சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ்[1]
வெளியீடு12 பெப்ரவரி 2017 (2017-02-12)(பெர்லின்)
6 ஏப்ரல் 2017 (Chile)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடு
 • சிலி
 • ஜெர்மெனி
 • ஸ்பெயின்
 • ஐக்கிய அமேரிக்கா[2]
மொழிஎசுபானியா
மொத்த வருவாய்$3.2 மில்லியன்[3][4]

கதை தொகு

மரினாவும் ஓர்லந்தோவும் காதலர்கள். மரினா, விடுதியொன்றில் பாடகியாகவும் பணிப்பெண்ணாகவும் இருக்கும் ஓரு திருநங்கை ஆவார். மரினாவின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, நடனமாடிக் களித்து, அடுக்ககத்துக்குத் திரும்புகிறார்கள். ஓர்லந்தோ திடீரெனப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்கிறார். வலியால் துடிக்கும் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் காத்திருக்கிறார் மரினா. ஓர்லந்தோ இறந்துவிட, காதலனின் மரணத்துக்கு அழக்கூட முடியாத வகையில் மரினாவைச் சிக்கல்கள் சூழ்ந்துகொள்கின்றன. காரணம் மரினா, திருநங்கை. மருத்துவர்களும் ஓர்லந்தோவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மரினாவுக்கு அந்த மரணத்தில் தொடர்பிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறார்கள். அவரைக் குற்றவாளிபோல் நடத்துகிறார்கள். இதனால் மரினா தான் தங்கியிருக்கும் அடுக்ககத்தையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். அதன்பறகு மரினா ஒவ்வொரு நொடியும் தன்னை மரினாவாக, பெண்ணாக நிரூபிக்க அவர் போராடுகிறார்.

மேற்கோள்கள் தொகு

 1. Hipes, Patrick (9 February 2017). "Sony Classics Picks Up Berlin Competition Pic ‘A Fantastic Woman’". Deadline.com. http://deadline.com/2017/02/a-fantastic-woman-berlin-deal-sony-pictures-classics-1201907101/. பார்த்த நாள்: 10 February 2017. 
 2. "LUMIERE: film: Una mujer fantástica". Lumiere Database. http://lumiere.obs.coe.int/web/film_info/?id=72670. பார்த்த நாள்: 8 March 2018. 
 3. "Una Mujer Fantástica (A Fantastic Woman)" இம் மூலத்தில் இருந்து 16 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170916053008/http://www.boxofficemojo.com/movies/intl/?page=&wk=2017W36&id=_fUNAMUJERFANTSTI01. பார்த்த நாள்: 24 March 2018. 
 4. "Una Mujer Fantástica". http://www.the-numbers.com/movie/mujer-fantastica-Una-(Chile)#tab=summary. பார்த்த நாள்: 10 November 2017. 
 5. "'A Fantastic Woman' wraps shoot". SceenDaily. http://www.screendaily.com/news/production/a-fantastic-woman-wraps-shoot/5101226.article. பார்த்த நாள்: 15 December 2016. 
 6. "Aki Kaurismäki, Oren Moverman, Agnieszka Holland, Andres Veiel, and Sally Potter – First Films for the Competition of the Berlinale 2017". Berlinale. 15 December 2016 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305003134/https://www.berlinale.de/en/presse/pressemitteilungen/wettbewerb/wettbewerb-presse-detail_34708.html. பார்த்த நாள்: 15 December 2016. 
 7. "Los latinos al Óscar 2018: Chile". Premios Óscar Latinos. 11 September 2017. https://premiososcarlatinos.wordpress.com/2017/09/12/los-latinos-al-oscar-2018-chile/. பார்த்த நாள்: 11 September 2017. 
 8. "Oscars 2018: The list of nominees in full". BBC News. 23 January 2018. http://www.bbc.co.uk/news/entertainment-arts-42788267. பார்த்த நாள்: 23 January 2018.