ஆசிய நெடுஞ்சாலை 13
(ஏஎச்13 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசிய நெடுஞ்சாலை 13 அல்லது ஏஎச்13 (AH13), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். லாவோசிலுள்ள ஓடோம்சாய், என்னும் இடத்திலிருந்து தாய்லாந்து நாட்டில் உள்ள நாக்கோன் சுவான் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 730 கிலோமீட்டர்.
ஏச்12 ஐ லாவோசின் "ஓடோம்சாய்" என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச் சாலை, ஏஎச்1, ஏஎச்2 ஆகிய நெடுஞ்சாலைகளின் பொதுப்பகுதியை தாய்லாந்தின் நாக்கோன் சுவானில் சந்திக்கிறது. ஏஎச்16 ஐ வெட்டிச் செல்கிறது.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- லாவோசு - 173 கிமீ
- தாய்லாந்து - 557 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)