ஆசிய நெடுஞ்சாலை 5
(ஏஎச்5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசிய நெடுஞ்சாலை 5 அல்லது ஏஎச்5 (AH5), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள சாங்காய் நகரில் இருந்து துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 8 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 10,380 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- அசர்பைசான் - 1,863 கிமீ
- சீனா - 4,815 கிமீ
- ஜார்ஜியா - 489 கிமீ
- கசாக்சுத்தான் - 481 கிமீ
- கிர்கிசுத்தான் - 126 கிமீ
- துருக்கி - 960 கிமீ
- துருக்மெனிசுத்தான் - 1,227 கிமீ
- உசுபெக்கிசுத்தான் - 677 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)