ஏகபாத மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
ஏகபாத மூர்த்தி

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

ஏகபாதமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். இம்மூர்த்தியை ஏகபாதர் எனவும் வழங்குகிறார்கள். ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது.[1]

திருவுருவக் காரணம் தொகு

ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும். அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கிவிடுவார்கள். ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையுமிடமாகவும் ஏகபாத மூர்த்தி இருக்கிறார்.

ஏகபாதமூர்த்தி சிலைகள் தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன.ஏகபாதமூர்த்தி நான்கு கரங்களுடன்,முக்கண் உடையவராய் ஒரு காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.சிவபெருமான் ஒரு காலில் நின்ற கோலத்தில் இருக்கவும்,அவர் இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும்,இடப்பக்கம் விஷ்ணுவும் தோன்றுகின்றனர்.பிரம்மாவும்,விஷ்ணுவும் அஞ்சலி முத்திரை காட்டுகின்றனர்.சிவபெருமானுக்கு பதில் ஆக்ரோஷ பைரவர் இருப்பின் அந்த வடிவத்தை ஏகபாத பைரவர் என அழைக்கின்றனர். சிவபெருமானின் ஒற்றைக்கால்,பிரபஞ்சத்தை தாங்கி நிற்கும் தூணாக கருதப்படுகிறது.வலது கை அபய முத்திரை காட்டியவண்ணம் இருக்க,இடது கை வரத கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.பின்கைகளில் மானும்,ஆயுதமும் ஏந்தி நிற்கிறார்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகபாத_மூர்த்தி&oldid=3434951" இலிருந்து மீள்விக்கப்பட்டது