ஏகலைவா விளையாட்டு அரங்கம்

ஏகலைவா விளையாட்டு அரங்கம் (Eklavya Sports Stadium) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா நகரில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] மகாபாரத காலத்திய இந்தியாவின் மிகவும் பிரபலமான மாணவரான ஏகலைவன் பெயர் இந்த அரங்கத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.[2] மைதானத்தில் ஒளிவெள்ளமூட்டும் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளதால் இங்கு பகல்-இரவு போட்டிகளை நடத்த முடியும்.

ஏகலைவா விளையாட்டு அரங்கம்
Eklavya Sports Stadium
முழு பெயர் ஏகலைவா விளையாட்டு அரங்கம்
இடம் ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
எழும்பச்செயல் ஆரம்பம் 1990
திறவு 1990
உரிமையாளர் ஆக்ரா மாநகராட்சி ஆணையம்
ஆளுனர் ஆக்ரா மாநகராட்சி ஆணையம்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 5,000

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்பார்க்கும் அனைத்து விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு இவ்வரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது இதனால் இங்கு ரஞ்சி கோப்பை போட்டிகளை விளையாட முடியும். 2008 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் ராசத்தான் மாநில 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் இடையில் விசய் மர்ச்சண்ட் நினைவு கோப்பை போட்டியை நடத்தியபோது ஏகலைவா விளையாட்டு அரங்கம் நிறுவப்பட்டது.[3]

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோ ஓண்டா மகளிர் உலகக் கோப்பை போட்டித் தொடரில் நெதர்லாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மகளிர் போட்டி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு ஆட்டம் நடைபெற சாத்தியம் இல்லாத்தால் பின்னர் கைவிடப்பட்டது.Women's ODI</ref>[4]

இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் தொகு

அணி (1) அணி (2) வெற்றி வித்தியாசம் ஆண்டு குறிப்பு
நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் கைவிடப்பட்டது 1997

மேற்கோள்கள் தொகு