ஏகாம்பர முதலியார்
தமிழ் எழுத்தாளர்
ஏகாம்பர முதலியார் தமிழ் எழுத்தாளர் ஆவர். இவர் நாராயணசாமி உபாத்தியாயர் என்பவருக்கு செஞ்சியில் சைவ வெள்ளாளர் மரபில் பிறந்தார். ஏகாம்பர முதலியார், சோதிடம் மற்றும் வைத்தியம் போன்ற துறையில் வல்லுனராக இருந்தார்.[1] எண்ணற்ற தமிழ் நூல்களை ஏழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் சில மருத்துவம் சார்ந்தவையாகவும் உள்ளன. சில அம்மானை நூல்களையும் நாடக நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது காலம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும்.
இவர், ‘உயர் நீதிமன்றச் சிந்து’ என்ற பாடலை உயர்நீதிமன்றத்தின் பெருமைகளை விளக்கும் விதமாக எழுதியுள்ளார்.[2]
நூல்கள்
தொகு- வைத்திய அரிச்சுவடி
- சர்வ விஷ முறிப்பு
- கர்ண மகாராஜன் (நாடகம்)
- மயில்ராவணன் (நாடகம்)
- சாரங்ரகதரன் அம்மானை
- நளச்சக்கரவர்த்தி அம்மானை
- அரிச்சந்திர அம்மானை
- அகடவிகட அகசிய பூஷணம்
- விகட விநோத கதை
- நீலி கதை
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ், செஞ்சி ஏகாம்பர முதலியார்!", World Tamil Forum - உலகத் தமிழர் பேரவை (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-02-05, பார்க்கப்பட்ட நாள் 2024-06-24
- ↑ சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வயசு 150-குங்குமம்