ஏக்கர் அடி (Acre foot) என்பது கன அளவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு அலகு ஆகும். பொதுவாக, ஏரிகள், நீர்காவிகள், கால்வாய்கள், சாக்கடை நீரோட்ட அளவு, ஆற்று நீரோட்டம் போன்ற பெரிய அளவிலான நீர்வளங்கள் தொடர்பில் இந்த அலகு பயன்படுத்தப்படுகின்றது.[1][2][3]

ஏக்கர் அடியின் அளவைக் காட்டும் வரைபடம். இது அளவுத் திட்டத்துக்கு அமைய வரையப்படவில்லை

வரைவிலக்கணம்

தொகு

ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஒரு அடி ஆழமுள்ள நீரின் கன அளவே ஒரு ஏக்கர் அடி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. ஒரு ஏக்கர் 66 அடி x 660 அடி (1 சங்கிலி x 1 பர்லாங்) என்பதால் அது சரியாக 43,560 சதுர அடி ஆகின்றது. எனவே ஒரு ஏக்கர் அடி 43,560 x 1 கன அடியாகும். அமெரிக்க கலன், கன மீட்டர், லீட்டர் ஆகிய கன அளவுகளோடு இது பின்வருமாறு தொடர்புகளைக் கொண்டுள்ளது:

1 ஏக்கர் அடி = 325,851 அமெரிக்க கலன்
1 ஏக்கர் அடி = 1,233.5 கன மீட்டர்
1 ஏக்கர் அடி = 1,233,500 லீட்டர்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "NM OSE Glossary". Archived from the original on 14 November 2005. Retrieved 15 March 2014.
  2. "U.S. Survey Foot". National Institute of Standards and Technology. January 4, 2023. Retrieved April 4, 2024.
  3. Water Rights Bureau; state of Montana (13 April 2004). "Form No. 627 R8/03 Notice of Water Right" (PDF). Archived from the original (PDF) on 25 January 2008. Retrieved 30 January 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்கர்_அடி&oldid=4164689" இலிருந்து மீள்விக்கப்பட்டது