ஏந்தல் வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

ஏந்தல் வண்ணம் என்பது சொன்ன சொல்லே திரும்பத் திரும்ப வருமாறு செய்யுள் இயற்றுவது. இதனைச் சொற்பின் வருநிலை அணி, சொற்பொருள் பின்வருநிலை அணி எனக் குறிப்பிடுகிறோம்.

கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா
கூடலுள் கூடலே கூடலும் – கூடல்
அரும்பிய முல்லை அரும்பவிழ் மாலை
பிரிவிற் பிரிவே பிரிவு. [1]

ஆணும் பெண்ணும் கூடுதலைக் கூடல் என்று சொல்லாதே. கூடல் நகரில் மக்கள் கூடுவதையே கூடல் என்று சொல். முல்லை மலரும் மாலை வேளையில் தலைவன் தலைவியைப் பிரிவதை மட்டுமே பிரிவு எனக் கொள்க. – என்பது இப்பாடலில் சொல்லப்பட்ட செய்தி.

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏந்தல்_வண்ணம்&oldid=1114571" இலிருந்து மீள்விக்கப்பட்டது