ஏனோக்குவின் நூல்

ஏனோக்குவின் நூல் என்பது பழங்கால எபிரேய வெளிப்பாடு சமய நூலகும். இது நோவாவின் கொள்ளுத் தாத்தாவான ஏனோக்கு எழுதியதாகக் கூறப்படுகிறது.[1][2]

பேய்கள் மற்றும் நெபிலிம்களின் தோற்றம், சில வானதூதர்கள் ஏன் விண்ணுலகத்திலிருந்து வீழ்ந்தார்கள், தொடக்கக்கால வெள்ளம் தார்மீக ரீதியாக ஏன் தேவைப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றும் மெசியாவின் ஆயிரம்-ஆண்டுகால ஆட்சியின் இறைவாக்கு உள்ளிட்டவை ஏனோக்கு புத்தகத்தின் தனித்துவமான அம்சங்களாக உள்ளன.

புத்தகத்தின் பழைய பகுதிகள் (பெரும்பாலும் பார்வையாளர்கள் புத்தகத்தின் பகுதி) கி.மு. 300-200 என்றும், சமீபத்திய பகுதி (உவமைகளின் புத்தகம்) கி.மு 100 என்றும் மதிப்பிடப்படுகிறது.[3]

சாக்கடல் சுருள்களில் காணப்படும் பல்வேறு அரமேயத் துண்டுகளும், கொய்னே கிரேக்கம் மற்றும் லத்தீன் துண்டுகளும், ஏனோகு புத்தகமானது யூதர்களாலும் தொடக்கக்கால கிழக்குவழிக் கிறிஸ்தவர்களாலும் அறியப்பட்டதற்கான சான்றுகளாக உள்ளன. புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்களும் இப்புத்தகத்தின் சில உள்ளடக்கங்களை நன்கு அறிந்திருந்தனர்.[4] ஏனோக்கின் ஒரு சிறு பகுதி (1:9) யூதாவின் புதிய ஏற்பாட்டு கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (யூதா 1:14-15), மேலும் "ஆதாமிலிருந்து ஏழாவது ஏனோக்கு" என்பது ஏனோக்கு 60:8 வசனத்தின் மேற்கோளாகும். ஏனோக்கு புத்தகத்தின் முந்தைய பகுதிகளின் பல பிரதிகள் சாக்கடல் சுருள்களில் பாதுகாக்கப்பட்டன.[5]

பெட்டா இஸ்ரேல் (எத்தியோப்பிய யூதர்கள்) தவிர, ஏனைய யூதர்கள் பயன்படுத்தும் விவிலிய நியதியில் ஏனோக்கு புத்தகம் இடம்பெறவில்லை. கிறிஸ்தவத்தில் சில கிறிஸ்தவக் குழுக்கள் ஏனோக்கு புத்தகத்தை விவிலிய நியதியின் பகுதியாக ஏற்கின்றனர், ஏனைய கிறிஸ்தவக் குழுக்கள் இதை நியமனம் அல்லாத அல்லது ஈர்க்கப்படாதவை என்று கருதுகின்றனர்.

சாக்கடல் சுருள்களில் இருந்து முந்தைய அராமிக் துண்டுகள் மற்றும் சில கிரேக்க மற்றும் லத்தீன் துண்டுகளுடன் எத்தியோப்பியன் கீஸ் மொழியில் மட்டுமே இன்று இது முழுமையாக உள்ளது. இதனால் இப்புத்தகம் கீஸ் மொழியில் எழுதப்பட்டது என்பது பாரம்பரிய எத்தியோப்பிய நம்பிக்கையாகும். அதேநேரம், நவீன அறிஞர்கள் இது முதலில் யூத நூல்களுக்கு முதலில் பயன்படுத்தப்பட்ட அராமிக் அல்லது எபிரேய மொழியில் எழுதப்பட்டது என்று வாதிடுகின்றனர். தானியேல் புத்தகத்தைப் போலவே ஏனோக்கின் புத்தகமும் ஓரளவு அராமிக் மொழியிலும் ஓரளவு எபிரேய மொழியிலும் இயற்றப்பட்டதாக எப்ரைம் ஐசக் கூறுகிறார்.[6] :6 எபிரேய பதிப்பு எஞ்சியதாக இதுவரை அறியப்படவில்லை. விவிலியப் பெருவெள்ளத்திற்கு முன்னர் வாழ்ந்த ஏனோக்கால் எழுதப்பட்டதாக இப்புத்தக்கம் வலியுறுத்துகிறது.

உள்ளடக்கம் தொகு

ஏனோக்கின் புத்தகத்தின் முதல் பகுதி, கவனிப்பாளர்கள் எனப்படும் வானதூதர்கள் குழுவின் வீழ்ச்சியை விவரிக்கிறது. இவர்கள் "நெபிலிம்" எனப்படும் வானதூதர்-மனித கலப்பினங்களைப் பெற்றவர்களாவர்.[7] புத்தகத்தின் எஞ்சிய பகுதி ஏனோக்கின் வெளிப்பாடுகள் மற்றும் விண்ணுலகப் பயணம் ஆகியவற்றை பயணங்கள், காட்சிகள் மற்றும் கனவுகள் மூலமாக விவரிக்கின்றது.[8]

புத்தகம் ஐந்து தனித்தனி முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது: [7]

  1. கவனிப்பாளர்கள் புத்தகம் (ஏனோக் 1–36)
  2. ஏனோக்கின் உவமைகள் புத்தகம் (ஏனோக் 37-71)
  3. வானியல் புத்தகம் (ஏனோக் 72-82)
  4. கனவுக் காட்சிகள் புத்தகம் (ஏனோக் 83-90)
  5. ஏனோக்கின் கடிதம் (ஏனோக் 91–108)

மேற்கோள்கள் தொகு

  1. Barker, Margaret. (2005) [1987]. "Chapter 1: The Book of Enoch," in The Older Testament: The Survival of Themes from the Ancient Royal Cult in Sectarian Judaism and Early Christianity. London: SPCK; Sheffield Phoenix Press. ISBN 978-1905048199
  2. Barker, Margaret. (2005) [1998]. The Lost Prophet: The Book of Enoch and Its Influence on Christianity. London: SPCK; Sheffield Phoenix Press. ISBN 978-1905048182
  3. Fahlbusch, E.; Bromiley, G.W. The Encyclopedia of Christianity: P–Sh page 411, ISBN 0-8028-2416-1 (2004)
  4. Cheyne and Black, Encyclopaedia Biblica (1899), "Apocalyptic Literature" (column 220). "The Book of Enoch as translated into Ethiopic belongs to the last two centuries BC. All of the writers of the NT were familiar with it and were more or less influenced by it in thought"
  5. Barker, Margaret. (2005) [1998]. The Lost Prophet: The Book of Enoch and Its Influence on Christianity. London: SPCK; Sheffield Phoenix Press. ISBN 978-1905048182ISBN 978-1905048182
  6. Ephraim Isaac, 1 Enoch: A New Translation and Introduction in James Charlesworth (ed.) The Old Testament Pseudoepigrapha, vol. 1, pp. 5-89 (New York, Doubleday, 1983, ISBN 0-385-09630-5)
  7. 7.0 7.1 Barker, Margaret. (2005) [1987]. "Chapter 1: The Book of Enoch," in The Older Testament: The Survival of Themes from the Ancient Royal Cult in Sectarian Judaism and Early Christianity. London: SPCK; Sheffield Phoenix Press. ISBN 978-1905048199ISBN 978-1905048199
  8. Barker, Margaret. (2005) [1998]. The Lost Prophet: The Book of Enoch and Its Influence on Christianity. London: SPCK; Sheffield Phoenix Press. ISBN 978-1905048182ISBN 978-1905048182
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனோக்குவின்_நூல்&oldid=3450575" இலிருந்து மீள்விக்கப்பட்டது