ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்

2018, ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இந்திய உச்ச நீதிமன்றம்,வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் முன்பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கான பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைகளினால் 10 பேர் இறந்தனர், நூற்றுக்கணக்கானோர் புண்பட்டனர்.[1][3][4][5].

ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்
தேதி2 ஏப்ரல் 2018
அமைவிடம்
காரணம்இந்திய உச்ச நீதிமன்றம் வன்கொடுமைச் சட்டத்தில் கைதானவர்கள் பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பளித்தது.
முறைகள்எதிர்ப்பு, கலகம், தீ வைப்பு, பந்த்
நிலைநடந்துகொண்டிருக்கிறது
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)14[1]
கைதானோர்100 (அரியானா)[2]
32 (உத்திரப் பிரதேசம்)

பின்னணி

தொகு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 இல் கொண்டுவரப்பட்ட சட்டமானது பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரை பாதுகாக்கின்றது. இந்தச் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு முன்பிணை ஆணை வழங்க அனுமதிக்கவில்லை. தங்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைது செய்து அவரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது கட்டாயமாகும்.[6]தேசிய ஆவணக் குற்றப் பதிவகத்தின் அறிக்கை 2016 இன் படி எஸ். சி சாதியினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் 25.7% குற்றவாளிகள் எனவும், 20.8% எஸ். டி சாதியினருக்கு எதிராக 20.8% பதியப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு வந்தது.[7] மார்ச் 20, 2018 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கினால் முன் அனுமதி வாங்கிய பிறகே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[6] இந்தத் தீர்ப்பிற்கு எதிராக இந்திய அரசின் சார்பாக இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.[8]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "SC refuses to stay its order on SC/ST Act; to hear matter" (in en-US). dna. 3 April 2018. http://www.dnaindia.com/india/report-not-against-scst-act-don-t-want-innocents-to-suffer-sc-while-hearing-review-petition-2600638. 
  2. "Violence during Bharat Bandh: 100 arrested in Haryana". The Indian Express. 4 April 2018. http://indianexpress.com/article/india/violence-during-bharat-bandh-100-arrested-in-haryana-5122513/. பார்த்த நாள்: 5 April 2018. 
  3. "India's Lower-Caste Dalits Lead Nationwide Protests Against Court Judgment". The New York Times. REUTERS. April 2, 2018. https://www.nytimes.com/reuters/2018/04/02/world/asia/02reuters-india-caste.html. பார்த்த நாள்: 7 April 2018. 
  4. "Anger in India as Lowest Caste Protests Supreme Court Order". The New York Times. THE ASSOCIATED PRESS. April 2, 2018. https://www.nytimes.com/aponline/2018/04/02/world/asia/ap-as-india-caste-protests.html. பார்த்த நாள்: 7 April 2018. 
  5. "Eight dead in massive India caste protests". BBC. 2 April 2018. https://www.bbc.com/news/world-asia-india-43616242. பார்த்த நாள்: 7 April 2018. 
  6. 6.0 6.1 "Dalit fury and what led up to it". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/dalit-fury-and-what-led-up-to-it/articleshow/63596287.cms. 
  7. Johari, Aarefa. "Supreme Court says SC/ST Atrocities Act is misused. So what explains the low conviction rates?" (in en-US). Scroll.in. https://scroll.in/article/873072/supreme-court-says-sc-st-atrocities-act-is-misused-so-what-explains-the-low-conviction-rates. 
  8. "SC/ST Act: Centre files review petition, says data shows weak execution of law, not its misuse" (in en). Hindustan Times. 2 April 2018. https://www.hindustantimes.com/india-news/sc-st-act-centre-files-review-petition-says-data-shows-weak-execution-of-law-not-its-misuse/story-UYTUwgBR9DtRzcWkjWgSsN.html.