ஏமூர் பகவதி கோயில்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டிதில் உள்ள கோயில்

ஏமூர் பகவதி கோயில் அல்லது கைப்பதி அம்பலம் (Emoor Bhagavathy Temple அல்லது Hemambika Temple) என்பது தென்னிந்தியாவிலுள்ள, கேரள மாநிலத்தில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள  ஒரு இந்து கோவிலாகும். இது பாலக்காடு நகரத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் ஒலவக்கோடு சந்திர்ரக்கு அருகே கல்லேக்களங்ஙராவில் அமைந்துள்ளது.

இந்த பகவதி பற்றி செவிவழியாக நிலவும் கதை உள்ளது. அதன்படி இந்த பகவதியை வேண்டி தவம்புரிந்த துறவியின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு நேரடியாக காட்சியளிக்க பகவதி சம்மத்தித்தாலும், அப்போது அங்கு அவரைத்தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தாளாம். அதனை அவரும் ஒப்புக்கொள்ள அம்மன் உருகொண்டு கண் திறந்து பார்த்தபோது, சுறிலும் ஏராளமானவர்கள் இருந்துள்ளனர். உடனே அம்மன் பூமிக்கடியில் மறைந்து தன் கைகளை மட்டும் காட்டினாளாம். இதனால் இங்கு அம்மனின் கைமட்டும் வழிபாட்டுக்குரியதாக உள்ளது.[1] காலையில் அம்மனை கலைமகளாக எண்ணி வழிபடுவதும், மதியம் அலைமகளாக எண்ணி வழிபடுவதும், மாலையில் துர்கையாக எண்ணி வழிபடுவதும் இங்கு வழக்கம்.


இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாக் காலத்தில் கேரள மரபு நிகழ்சிகளான ஓட்டந்துள்ளல், சாக்கியர்கூத்து, கதகளி, கழச்ச சீவேலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதே போல் மீனம் (பங்குனி) மாதத்தில் வரும் அம்மன் நிறுவப்பட்ட நாளில் (பிரதிஷ்டா தினம்) லட்சார்ச்சனையும், கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி திருநாட்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. விருச்சிகம் (கார்த்திகை) மாதம் ‘தாரிகா வதம்’ நிகழ்வு சிறப்பாகக் நடக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமூர்_பகவதி_கோயில்&oldid=3827701" இலிருந்து மீள்விக்கப்பட்டது