ஏர்ணஸ்ட் ருஸ்கா

ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா (Ernst August Friedrich Ruska) (டிசம்பர் 25, 1906–மே 25, 1988), ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவர் ஹெய்டில்பர்க்கில் (Heidelberg) பிறந்தார். 1925 தொடக்கம் 1927 வரை மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். ஒளியைப் பயன்படுத்தும் நுண்நோக்கியைக் காட்டிலும் ஒளியிலும் அலைநீளம் குறைந்த இலத்திரன்களைப் பயன்படுத்துவதன்மூலம் கூடிய உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என உணர்ந்தார். 1931 இல் இலத்திரன் வில்லை ஒன்றை உருவாக்கிய இவர், தொடர்ந்து இவ்வாறான பல வில்லைகளை உருவாக்கினார். 1933 இல், இலத்திரன் நுண்நோக்கியை உருவாக்கினார்.

ஏர்ணஸ்ட் ருஸ்கா
பிறப்புErnst August Friedrich Ruska
திசம்பர் 25, 1906(1906-12-25)
ஹைடல்பெர்க், ஜெர்மனி
இறப்பு27 மே 1988(1988-05-27) (அகவை 81)
மேற்கு பெர்லின், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்Fritz Haber Institute
பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மேக்ஸ் நால்
அறியப்படுவதுஇலத்திரன் நுண்நோக்கி
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1986)
இலத்திரன் நுண்நோக்கி 1928 இல் ஏர்ணஸ்ட் ருஸ்காவல் வடிவமைக்கபட்டது

1937க்கும், 1955க்கும் இடையில் Siemens-Reiniger-Werke AG என்னும் நிறுவனத்தில் ஆய்வுப் பொறியியலாளராகப் பணியாற்றிய இவர் 1955 தொடக்கம், 1972 வரை பிரிட்ஸ் ஹார்பெர் நிறுவனத்தின் (Fritz Harber Institute) இலத்திரன் நுண்நோக்கியல் நிறுவனத்தில் (Institute for Electron Microscopy) இயக்குனராகப் பணி புரிந்தார். அதே சமயத்தில் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் ஓய்வு பெறும்வரை பேராசிரியராகக் கடமையாற்றினார். 1986 இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு இவர் மேற்கு ஜெர்மனியில் காலமானார்.

இவற்றையும் பார்க்கதொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ணஸ்ட்_ருஸ்கா&oldid=2713397" இருந்து மீள்விக்கப்பட்டது