ஏர்பசு ஏ 330 5000 முதல் 13,500 கிலோமீட்டர்கள் வரை செல்லும் நடுத்தர நீண்டதூர வானூர்தி. ஏர்பசு தயாரிக்கும் இது அகண்ட உடல் இரட்டை பொறி ஜெட் வானூர்தி ஆகும். இதில் 335 பயணிகளையோ அல்ல 70 டன் சரக்குகளையோ கொண்டு செல்ல முடியும்.

ஏ330
A white and red Turkish ஏAirlines A330-300 with the undercarriages extended over a blue sky.
ஏர்பசு 330-300, அதிகமான ஏ330ஐ கொண்டுள்ள துருக்கிய ஏர்லைனில் உள்ள முதல் தயாரிப்பும் அதிகமாக பயன்பாட்டுல் உள்ளதும்.
வகை அகண்ட உடல் வானூர்தி
உருவாக்கிய நாடு பன்னாட்டு தயாரிப்பு[1]
உற்பத்தியாளர் ஏர்பசு
முதல் பயணம் 2 நவம்பர் 1992
அறிமுகம் ஏர் இன்டரில் 17 சனவரி 1994
தற்போதைய நிலை பயனில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் துருக்கிய ஏர்லைன்
Air China
China Eastern Airlines
China Southern Airlines
உற்பத்தி 1992–present
தயாரிப்பு எண்ணிக்கை 1,479 as of 31 அக்டோபர் 2019[2]
திட்டச் செலவு $3.5 billion (with A340, 2001 dollars)[3]
அலகு செலவு A330-200: US$238.5M (2018)[4]
A330-300: US$264.2M (2018)[4]
A330-200F: US$241.7M (2018)[4]
முன்னோடி Airbus A300
மாறுபாடுகள் Airbus A330 MRTT
EADS/Northrop Grumman KC-45
பின் வந்தது Airbus A330neo
Airbus Beluga XL

1970 களின் நடுப்பகுதியில் ஏர்பசின் முதல் வானூர்தியான ஏ300 இன் உருவாக்கத்திற்காக உருவான பல வகைகளில் ஒன்றிலிருந்தே ஏ330 உருவானது. ஏ330 ஆனது நான்கு எஞ்சின் ஏ340 வுடன் இணையாக உருவாக்கப்பட்டது, இவற்றின் பொறிகளின் எண்ணிக்கை வேறுபட்டாலும் இவை பல பொதுவான வானூர்தி கட்டகங்களை பகிர்ந்து கொண்டன. இரண்டு வானூர்திகளும் வான்கல மின் கட்டுப்பாட்டு முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தின, முதலில் ஏர்பசு ஏ 320 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 1987 இல், பல்வேறு வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்காணைகளை பெற்ற பிறகு, ஏ330 மற்றும் ஏ340 ஐ ஏர்பசு அறிமுகப்படுத்தியது. ஜெனரல் எலக்ட்ரிக் சிஎஃப் 6, பிராட் & விட்னி பிடபிள்யூ 4000 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ட்ரெண்ட் 700 ஆகிய மூன்று பொறி வகைகளில் பயனாளி ஒன்றை தேர்ந்தெடுக்கும் வசதியை கொடுத்த ஏர்பசின் முதல் வானூர்தி ஏ330 ஆகும்.

ஏ330-300 வகையின் முதல் பறப்பு, நவம்பர் 1992 இல் நடந்தது, 1994 சனவரியில் ஏர் இன்டர் நிறுவனம் மூலம் பயணிகள் சேவையில் நுழைந்தது. அதைத்தொடர்ந்து சற்று சிறிய வகை ஏ330-200 வானூர்திகளை 1998 இல் ஏர்பசு உருவாக்கியது. பின்னர் உருவாக்கிய இராணுவ வானூர்திகள், வணிக நிறுவன வானூர்திகள், சர்கு வானூர்திகள் உட்பட அனைத்து ஏ330 வகை வானூர்திகளிலும் ஓர் சிறப்பு சரக்கேற்று கலனை பொருத்தியது.

ஏ330 ஏர்பசு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, போயிங்கின் இரட்டை ஜெட் வானூர்திகள் 767 & 777 உடன் போயிங் 787 இன் போட்டிகளுக்கிடையே அகண்ட உடல் வானூர்திகளின் சந்தை பங்கை ஏர்பசு அதிகரித்துள்ளது. ஏ330 & ஏ340 இரண்டின் வெற்றிக்கடுத்து நீண்ட தூர ஏர்பசு ஏ350 எக்சுடபல்யுபி திட்டமிடப்பட்டது. ஏர்பசு தற்போதைய A330 ஐ (2014 முதல் A330தபொதே (தற்போதைய பொறி தேர்வு) என குறிப்பிடப்படுகிறது) புதிய பொறிகளும் பிற மேம்பாடுகளும் உள்ள A330அபொதே கொண்டு மாற்ற விரும்பியது.[5][6][7] செப்டம்பர் 2019 நிலவரப்படி, ஏ330 இன் வாங்காணைகள் 1,751 ஆக உள்ளது, அவற்றில் 1,473 வழங்கப்பட்டுள்ளன, 1,433 செயல்பாட்டில் உள்ளன. துருக்கிய ஏர்லைன்ஸ் 68 ஏ 330 வானூர்திகளைக் கொண்டுள்ளது.[2]

உருவாக்கம்

தொகு

பின்னணி

தொகு
ஏர்பசு செட்லைனர்கள், 1972-1994
மாதிரி ஏ 300 ஏ 310 ஏ 320 330 ஏ 340
முன்பு பயன்படுத்தப்பட்ட குறியீடு - பி10 எசுஎ2 பி9
(டிஎ9)
பி11 ஆக
(டிஎ11)
அறிமுகமான ஆண்டு 1972 1983 1988 1994 1993
உடல் அகண்டது அகண்டது குறுகியது அகண்டது அகண்டது
பொறிகள் 2 2 2 2 4
தொலைவின் வீச்சு 7,050 கிமீ 8,060 கிமீ 5,600 கிமீ 11,760 கிமீ 13,500 கிமீ

ஏர்பசின் முதல் வானூர்தி, ஏ300, வணிக வானூர்திகளின் பரந்துபட்ட குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. இந்த இலக்கைப் தொடர்ந்து, 1970 களின் முற்பகுதியில் ஏ300 இன் வழித்தோன்றல்களுக்கான ஆய்வுகள் தொடங்கின.[8][9] ஏ300 ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன், ஏர்பசு ஒன்பது வேறுபட்ட வகைகளை அறிந்து அவற்றை பி1 முதல் பி9 வரை பெயரிட்டு அழைத்தது.[10] 1973 இல் உருவான பத்தாவது வகை ஏ300பி10 ஆனது நீண்ட தூர ஏர்பசு ஏ 310 ஆக உருவாக்கியது. ஏர்பசு பின் தன் முயற்சிகளை ஒற்றை-நடைவழி (எஸ்.ஏ) ஆய்வுகளில் கவனம் செலுத்தியது அதிலிருந்து ஏர்பசு ஏ 320 குடும்பம் என்று அழைக்கப்படும் வானூர்திகளின் குடும்பத்தை கருத்தரித்தது, இது எண்ணிம மின் கட்டுப்பாட்டு முறையை கொண்ட முதல் வணிக வானூர்தியாகும். இந்த ஆய்வுகளின் போது ஏர்பசு தனது கவனத்தை மீண்டும் அகண்ட உடல் வானூர்தி சந்தையில் திருப்பியத்தோடு இரண்டு திட்டங்களிலும் ஒரே காலத்தில் வேலை செய்தது.[8]

1970 களின் நடுப்பகுதியில், ஏர்பசு ஏ300பி9 இன் உருவாக்கத்தை தொடங்கியது, இது ஏ300 இன் பெரிய வகை ஆகும், இது இறுதியில் ஏ330 ஆக மாற்றம் பெற்றது. பி 9 அடிப்படையில் நீளமான இறக்கை உடைய ஏ 300 ஆகும், அதோடு மிக சக்திவாய்ந்த டர்போபான் பொறிகளையும் கொண்டது. இது வளர்ச்சியுடைய வான்போக்குவரத்து தேவையுள்ள நடுத்தர தொலைவு வீச்சுள்ள கண்டம் கடக்கும் வழியை இலக்காகக் கொண்டு செயல்பட்டது.[8] மெக்டோனல் டக்ளஸ் டி.சி -10 வானூர்தியின் தொலைவு வீச்சையும் அதே அளவு எடையையும்   கொண்டிருந்துடன் அதை விட 25% எரி பொருள் சிக்கனம் உள்ளதாக இருந்ததால் பி9 டிசி-10இக்கும்  ட்ரைஇசுடார் ட்ரைசெட்டுகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்டது [11] இது ஏ300 இன் நடுத்தர-தொலைவு வானூர்தியின் தோன்றலாகவும் கருதப்பட்டது.[8]

குறிப்புகள்

தொகு
குறிப்புக்கள்
மேற்கோள்கள்
  1. Final assembly in France
  2. 2.0 2.1 "Airbus orders and deliveries". Airbus S.A.S. 31 October 2019. Archived from the original (XLS) on 2017-06-20. பார்க்கப்பட்ட நாள் 7 November 2019.
  3. "Long time coming". Flight International. 12 June 2001. https://www.flightglobal.com/news/articles/long-time-coming-131205/. 
  4. 4.0 4.1 4.2 "AIRBUS AIRCRAFT 2018 AVERAGE LIST PRICES* (USD millions)". 15 January 2018 இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180115185203/http://www.airbus.com/content/dam/corporate-topics/publications/backgrounders/Airbus-Commercial-Aircraft-list-prices-2018.pdf. 
  5. "Airbus launches the A330neo". Airbus.com. Archived from the original on 2016-06-29.
  6. "Living up to its billing: Airbus officially launches the A330neo programme". Airbus.com. Archived from the original on 20 July 2014.
  7. "A330neo: Powering into the next decade". Airbus.com. Archived from the original on 19 September 2014.
  8. 8.0 8.1 8.2 8.3 Norris & Wagner 2001
  9. Wensveen 2007
  10. Gunston 2009
  11. Flight International 1981, p. 1155.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்பசு_ஏ330&oldid=3968274" இலிருந்து மீள்விக்கப்பட்டது