ஏர் இந்தியா ஒன்
ஏர் இந்தியா ஒன் (AI-001 அல்லது AI-1[1]) என்பது இந்தியாவின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சுமந்து செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் பெயராகும். இதை இந்திய வான்படை இயக்குகிறது.[2] இந்த விமானத்தின் இயக்கத்தை புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் கண்காணிக்கும். இந்த நிலையத்திற்கு பாலம் ஏர்போர்ஸ் விமான தளம் என்ற பழைய பெயரும் உண்டு.[3]
பின்னணி
தொகுஅமெரிக்க அதிபரின் சிறப்பு விமானமான ஏர் போர்ஸ் ஒன் விமானத்தைப் போன்று இந்தியாவின் அதிமுக்கிய தலைவர்கள் பயணம் மேற்கொள்ள போயிங் 747, போயிங் 700 ஆகிய இரண்டு விமானங்கள் வாங்கப்பட்டன. இதற்கு முன் போயிங் 737 என்ற விமானம் இந்த பணியை மேற்கொண்டது. பொதுவாக இரண்டு விமானிகளைக் கொண்டே விமானங்கள் இயக்கப்படும். இந்த விமானத்தில் மட்டும் பாதுகாப்பிற்காக 4 விமானிகள் பணியில் இருப்பர். பிற அதிமுக்கிய ஆட்களை சுமந்து செல்ல, இந்திய இராணுவத்திடம் 14 பேர் அமரக்கூடிய 4 எம்பரேசர் 135 வகை விமானங்களும், மூன்று போயிங் பிசினஸ் ஜெட் விமானங்களும் உள்ளன. எம்பரேசர் 135 விமானத்தின் விலை ₹ 1.40 பில்லியன் ஆகும். போயிங் பிசினஸ் ஜெட் விமானம் ₹ 9.34 பில்லியன் ஆகும். இதில் விமானத்திற்காக ₹ 7.34 பில்லியனும், தற்காப்பு கருவிகளுக்காக ₹ 2 பில்லியனும் செலவிடப்பட்டன.
பாதுகாப்புக் கருவிகள்
தொகுஇதில் சிறப்பு ராடார் கருவிகளும், ஏவுகணை எச்சரிப்பு கருவிகளும் உள்ளன. வானிலேயே எரிபொருள் நிரப்பும் திறனையும், ஏவுகணையை எதிர்த்து தாக்கும் திறனையும் கொண்டது. செயற்கைகோள் தொலைபேசி இணைப்புகளும், அணு ஆயுதத்தால் எளிதில் தாக்க முடியாத கட்டமைப்பும், அவரச காலங்களில் வானத்தில் இருந்தபடியே கட்டளைகளை பிறப்பிக்கும் திறனும் இந்த விமானத்திற்கு உண்டு. மற்ற பாதுகாப்புக் கருவிகளை பற்றி தகவல்களை இந்திய ராணுவம் வெளியிடவில்லை.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொகுஇந்த விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனி நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. விமானத்தில் நிரப்பப்படும் எரிபொருளும், தண்ணீரும் சோதிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Air India One, Seat No 59G". 26 September 2010 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110113173507/http://www.indianexpress.com/news/air-india-one-seat-no-59g/687970/1. பார்த்த நாள்: 9 April 2011.
- ↑ "April 1 date for President with business jets". Zee News. 16 March 2009. http://www.zeenews.com/nation/2009-03-16/515323news.html#. பார்த்த நாள்: 8 April 2011.
- ↑ "India's own Air Force One takes to the skies". The Hindu. 1 April 2009 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110926214104/http://www.hindu.com/thehindu/holnus/000200904011612.htm. பார்த்த நாள்: 9 April 2011.