ஏர் மார்சல் அரி சந்த் திவான்

ஏர் மார்சல் அரி சந்த் திவான் (Hari Chand Dewan) (20 செப்டம்பர் 1921–22 ஆகசுடு 2017) ஒரு இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிசுதான் போரில் கிழக்கு விமானப்படையின் தலைவராக பணியாற்றியதற்காக அவருக்கு 1972 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1]

ஏர் மார்சல்

எச்.சி.திவான்

பிறப்பு20-09-1921
இறப்பு22-08-2017
சார்பு இந்தியா பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (1942–1947)
 இந்தியா (1947 முதல்)
சேவை/கிளைஅரச இந்திய விமானப்படை
இந்திய வான்படை
போர்கள்/யுத்தங்கள்பர்மா பிரச்சாரம்
லெப்டினன்ட் செனரல் அரோராவின் பார்வையின் கீழ் சரணடைவதற்கான பாகிசுதானிய லெப்டினன்ட் செனரல் ஏஏகே நியாசி கையெழுத்திட்டார். உடனடியாக பின்னால் நிற்கும் வைசு அட்மிரல் கிருச்ணன், ஏர் மார்சல் திவான், லெப்டினன்ட் செனரல் சகத் சிங், மேசர் செனரல் சே.எப்.ஆர் சேக்கப்

தொழில்

தொகு

அரி சந்த் திவான் 20 செப்டம்பர் 1921 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] 1940 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குப் பணியமர்த்தப்பட்ட 24 இந்திய விமானிகளில் இவரும் ஒருவர்.[3] 1969 ஆம் ஆண்டு பரம் விசிட்ட சேவா பதக்கம் பெற்றார்.[4] 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிசுதான் போரில் கிழக்கு விமானப்படையின் தலைவராக இருந்தார்.[5]

இறப்பு

தொகு

திவான் 2017 ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் 22 ஆம் தேதி தனது 95 வயதில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 19 October 2017. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  2. 2.0 2.1 "Service Record for Air Marshal Hari Chand Dewan". Bharat Rakshak (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
  3. Chowdhry, Mohindra S. (2018). "7. Sikhs in the Second World War". Defence of Europe by Sikh Soldiers in the World Wars (in ஆங்கிலம்). Leicestershire: Troubador Publishing Ltd. pp. 329–383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78803-798-3.
  4. The Rotarian (in ஆங்கிலம்). Rotary International. 1969. p. 28.
  5. Batabyal, Guru Saday (2020). Politico-Military Strategy of the Bangladesh Liberation War, 1971 (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-031766-4.