ஏற்றிச் செல்லி அமைப்பு

ஏற்றிச் செல்லி அமைப்பு (Conveyor system) என்பது பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களைக் கையாளும் இயந்திரம். இது பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் இயந்திரம் ஆகும். பொதுவாக அதிக அளவு பொருள்களை இடம் மாற்றும் பகுதிகளிலும் அதிக எடை கொண்ட பொருள்களை இடம் மாற்றும் பகுதிகளிலும் இது பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் பொதியல் (packaging) செய்யும் பகுதிகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது[1]. தொழிற்சாலைகளின் பயன்பாடுகளுக்கு ஏற்பப் பலவகையான ஏற்றிச் செல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.இதில் முக்கிய வகை சங்கிலி ஏற்றிச் செல்லி[2] . சங்கிலி ஏற்றிச் செல்லி பல தொழிற்சாலைகளில் பல விதங்களில் பயன்படுகிறது. சங்கிலி ஏற்றிச் செல்லிகளில் வாளிகளை இணைத்து அதில் பொருள்களை ஏற்றிச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் ஏற்றிச் செல்லி அமைப்பின் பயன்பாடுகள்

தொகு

ஏற்றிச் செல்லி அமைப்பை பயன்படுத்துவதில் நிறைய நன்மைகள் உள்ளதால் பரவலாக அனைத்துத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

  • உயரமான பகுதிகளுக்கு பொருளைப் பாதுகாப்பாகவும் குறைந்த செலவிலும் எடுத்துச் செல்ல முடியும்.
  • எந்த இடத்திலும் இதை நிறுவ முடியும்.
  • எந்த வடிவ,அளவு மற்றும் எடையுள்ள பொருள்களையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும்.
  • இதை இயக்குவது சுலபம். இதில் உணரிகளை அமைப்பதன் மூலம் பொருள்கள் இல்லாத போது தானாக நிறுத்தியும் பொருள்கள் ஏற்றப்பட்டதும் மீண்டும் இயங்கவும் ஆரம்பிக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Conveyor Systems". Conveyor Systems. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  2. "Conveyor". Chain Conveyor. Archived from the original on 29 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 31 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்றிச்_செல்லி_அமைப்பு&oldid=3546678" இலிருந்து மீள்விக்கப்பட்டது