முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஏழாம் லியோ (திருத்தந்தை)

திருத்தந்தை ஏழாம் லியோ (இலத்தீன்: Leo VII; இறப்பு 13 ஜூலை 939) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 ஜனவரி 936 முதல் 939இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் யோவானுக்குப் பின் பதவி ஏறிய இவர் திருத்தந்தை எட்டாம் ஸ்தேவானுக்கு முன் ஆட்சிசெய்தவர் ஆவார்.[1][2] உரோமை நகரின் அப்போதைய ஆட்சியாளர் சுபோலேதோவின் இரண்டாம் அல்பெரிக்கின் விருப்பத்தால் இவர் திருத்தந்தையாக்கப்பட்டர். உரோமையின் புனித சிக்ஸ்துஸாலயத்தில் புனித ஆசிர்வாதப்பர் சபையின் துறவியாக இருந்தார். இப்பதவியினை இவர் விரும்பாதபோதிலும் கட்டாயப்படுத்தி இவருக்கு அளிக்கப்பட்டது.

திருத்தந்தை
ஏழாம் லியோ
Pope Leo VII.jpg
ஆட்சி துவக்கம்3 ஜனவரி 936
ஆட்சி முடிவு13 ஜூலை 939
முன்னிருந்தவர்பதினொன்றாம் யோவான்
பின்வந்தவர்எட்டாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்புதகவல் இல்லை
இறப்பு13 சூலை 939(939-07-13)
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இவர் திருத்தந்தையாக மூன்று வருடம் ஆட்சிசெய்தார். குளூனி மடம் உட்பட இவர் பல மடங்களுக்கு உதவிசெய்துள்ளார்.[3] ஆல்பரிக் மற்றும் அவரின் வளர்ப்புத் தந்தையான இத்தாலியின் அரசர் ஹக்குக்கும் இடையே இருந்த பிணக்கை தீர்க்க இவர் குளூனி மட அதிபரை அனுப்பினார்.

செருமனியில் ஃபெதரிக் என்பவரை மினாஸ் நகரின் பேராயராக இவர் நியமித்தார். திருமுழுக்கு பெற விரும்பாத யூதர்களை நாடுகடத்த ஃபெதரிக்குக்கு இவர் அனுமதியளித்தார். எனினும் யூதர்களுக்கு கட்டாய திருமுழுக்கு அளிப்பதை இவர் ஏற்கவில்லை.[4]

ஜூலை 939இல் ஏழாம் லியோ, தனது இறப்புக்கு பின்பு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்தொகு