ஏழு தலைமுறைகள் (புதினம்)
ஏழு தலைமுறைகள் என்னும் புதினம் ஏ.ஜி.எத்திராஜுலு எழுதிய தமிழ்ப் புதினம். இது 2001ஆம் ஆண்டில் வெளியானது. இது அலெக்ஸ் ஹேலி என்பவர் எழுதிய ரூட்ஸ்:தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் பேமிலி என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு. ஆங்கில மூல நூல் 1967ஆம் ஆண்டில் வெளியானது. இது அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இன இளைஞனது பரம்பரையைப் பற்றிய கதை.
ஆங்கிலப் பதிப்பின் முதல் அட்டைப்படம் | |
நூலாசிரியர் | அலெக்ஸ் ஹேலி |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | ஏ.ஜி.எத்திராஜுலு |
நாடு | அமெரிக்கா |
மொழி | தமிழ் மொழிபெயர்ப்பு |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | சவுத் விஷன் வெளியீட்டகம் |
வெளியிடப்பட்ட நாள் | தமிழில் 2001 |
ஊடக வகை | அச்சு |
பக்கங்கள் | 320 பக்கங்கள் |
OCLC | 2188350 |
LC வகை | E185.97.H24 A33 |
உள்ளடக்கம்
தொகுகதை "குண்ட்டா"வின் பிறப்பில் இருந்து தொடங்குகிறது. 1750-ஆம் ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டிலுள்ள ஜப்பூர் கிராமம்தான் குண்ட்டா பிறந்த ஊர். அவனுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து, அவன் பருவ வயது பயிற்சியை முடிக்கும் வரையிலான புதினத்தின் ஒவ்வொரு அடியும் அந்த இன மக்களின் உழைப்பை, வாழ்க்கையை, உறவு முறைகளை, இயற்கை பற்றிய அறிவு வளர்ச்சியை, நம்பிக்கையைக் கோர்வையாக எடுத்துச் சொல்கிறது.
அமெரிக்கா வந்தவுடன் ஒரு முதலாளியிடம் விற்கப்படுகிறார் குண்ட்டா. அவரது பரம்பரையின் வாழ்க்கை முறை, அவர் தப்பியதும் மாட்டிக் கொண்டதும், அவரது போராட்டம், காதல், வாழ்வு முறை உள்ளிட்டவற்றுடன் அவரது பரம்பரையை பற்றிய புதினம். அவரது மகள், பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலியுடனும் மௌனத்துடனும் பதிவு செய்கிறது. தன் இனம் வரலாறு தெரிய வேண்டும் என்பதற்காய் குண்ட்டா தன் பாட்டன் முப்பாட்டனின் கதைகளை மகளுக்குச் சொல்கிறார். மகள் தன் மகனுக்குச் சொல்ல, இப்படி பரம்பரை பரம்பரையாய் அவர்கள் தன் முன்னோர்களின் வாழ்க்கையைத் தனது அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். புதினத்தின் சிறப்பியல்பு கடைசி தலைமுறையில் ஆசிரியர் தோன்றுகிறார். அவரின் மூதாதையரே குண்ட்டா! அவரின் கதை கேட்டு குண்ட்டா பிறந்த இடத்திற்கு செல்கிறார் ஆசிரியர். இடத்தை தேடி கண்டுபிடித்து, அம்மக்களைத் தன் சொந்த மக்களைப் பார்க்கும் விதமாக எழுதியிருக்கிறார் அலெக்ஸ் ஹேலி.[1]
புதினத்தின் கதாப்பாத்திரங்கள்
தொகு- குண்ட்டா
- ஜான் வாலர்
- டாக்டர் வில்லியம் வாலர்
- பெல் வாலர்
- கிஸ்ஸி வாலர்
- மிஸ்ஸி அன்னி
- டாம் லியா - வட கரோலைனாவில் வாழ்ந்த அடிமையின் முதலாளி
- ஜார்ஜ் லியா - டாம் லியா மற்றும் கிஸ்ஸியின் மகன், சிக்கன் ஜார்ஜ் என்றும் அழைக்கப்படுகிறான்.
- மாட்டில்டா
- டாம் முர்ரே
- சிந்தியா
- பெர்த்தல - சிந்தியாவின் குழந்தைகளில் ஒருவர்; அலெக்ஸ் ஹேலியின் அம்மா
- சிமோன் அலெஸாண்டர் ஹேலி - ஆசிரியர் மற்றும் பெர்த்தாவின் கணவர்; அலெக்ஸ் ஹேலியின் அப்பா
- அலெக்ஸ் ஹேலி - புத்தகத்தின் ஆசிரியர் [2]
ஹேலி புலிட்சர் பரிசை 1977 ஆம் ஆண்டு பெற்றார். [3]
ஆங்கில மூலநூலின் வெளியீட்டு விபரம்
தொகு- 1976, ஐஅ, டபுல்டே புக்ஸ் (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-03787-2), வெளியீட்டு நாள் 12 செப்டம்பர் 1976 (முதல் பதிப்பு)
- 1977, இங்கிலாந்து, ஹட்சின்சன் (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-129680-3), வெளியீட்டு நாள் ? ஏப்ரல் 1977
மேற்கோள்கள்
தொகு- ↑ (1976, June 13). "Book Ends", தி நியூயார்க் டைம்ஸ், p. 222
- ↑ The New York Times Best Seller List — May 8, 1977
- ↑ Carmody, Deidre. (1977, April 19). "Haley Gets Special Pulitzer Prize; Lufkin, Tex., News Takes a Medal", தி நியூயார்க் டைம்ஸ், page 69