ஏவான் ஆறு
ஏவான் ஆறு இங்கிலாந்தில் பாய்கிறது. இது தென்மேற்கில் பாயும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆற்றினை அதே பெயரில் உள்ள வேறு பல ஆறுகளில் இருந்து வேறுபடுத்தி அறியுமாறு பிரிஸ்டல் ஏவான் என்றும் அழைக்கிறார்கள். "ஏவான்" என்ற பெயர் வேல்சு மொழியில் "ஆறு" எனப் பொருள்படும் Afon என்ற சொல்லுக்கு இணையான சொல்லாகும்.[1].
ஏவான் ஆறு (கீழ் ஏவான்) | |
பிரிஸ்டல் ஏவான் | |
ஆறு | |
அவான் ஜார்ஜ் மற்றும் கிளிஃப்டன் தொங்கு பாலம்
| |
பெயர் மூலம்: பொது பிரிட்டோனிக் abona, "ஆறு" | |
நாடு | இங்கிலாந்து |
---|---|
இங்கிலாந்தின் மாவட்டங்கள் | க்ளாஸ்டர்ஷியர், வில்ட்ஷயர், சோமர்செட், பிரிஸ்டல் |
கிளையாறுகள் | |
- இடம் | மல்கோ ஆறு, பிரிலிங்டன் புரூக் ஆறு, சேவ் ஆறு, Corston Brook, Midford Brook, River Frome, Paxcroft Brook, River Biss, Semington Brook, Cocklemore Brook, River Marden, Brinkworth Brook, Woodbridge Brook, Tetbury Avon |
- வலம் | River Trym, River Frome (Bristol), Siston Brook, River Boyd, Lam Brook, Bybrook, Gauze Brook |
நகரங்கள் | சிப்பன்ஹாம், மெல்க்ஷாம், பிராடுபோர்டு, ஏவான், பாத், பிரிஸ்டல் |
உற்பத்தியாகும் இடம் | அக்டோன் துர்வில்லே |
- உயர்வு | 120 மீ (394 அடி) |
கழிமுகம் | செவேர்ன் ஈஸ்டுரி |
- அமைவிடம் | ஏவான்மவுத், பிரிஸ்டல், இங்கிலாந்துக்கு மேற்கே, இங்கிலாந்து |
நீளம் | 120 கிமீ (75 மைல்) |
வடிநிலம் | 2,308 கிமீ² (891 ச.மைல்) |
Discharge | for பாத் |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
ஆற்று முறை | செவர்ன் ஆறு |
தெற்கு க்ளோஷெஸ்டெர்ஷேரில் உள்ள அக்ரன் டர்வில் என்ற ஊரின் வடக்கே தோன்றும் ஏவான் ஆறு அதன் பிறகு வில்ட்ஷயர் வழியாகப் பாய்கிறது. பாத் என்ற இடத்தில் இருந்து பிரிஸ்டல் அருகே இருக்கும் அவான்மவுத்தில் உள்ள செவர்ன் எஸ்சுவரி வரையான ஆற்றின் பகுதி, படகுச் சேவைக்கு உகந்த நீரோட்டம் கொண்டதாக உள்ளது. 121 கிமீ ஓடும் ஏவான் இங்கிலாந்தின் 19 வது மிக நீண்ட ஆறு ஆகும். எனினும், அதன் தோற்றுவாய்க்கும் கழிமுகத்துக்கும் இடையே நேரடித் தொலைவு 31 கிமீ மட்டுமே ஆகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 2,220 சதுர கிலோமீட்டர் ஆகும்.
சொற்பிறப்பு
தொகுஏவான் என்ற பெயர் வெல்ஷ் மொழியில் ஆறு எனப் பொருள் படும்.[2][3] எனவே "ஏவான் ஆறு", என்பதை அப்படியே மொழிபெயர்த்தால் ஆறு ஆறு எனப்படும்; பல ஆங்கில மற்றும் ஸ்காட்டிஷ் ஆறுகள் இதே பெயரில் அமைந்துள்ளன. 1974 முதல் 1996 வரை இருந்த ஏவான் மாவட்டம் இந்த ஆற்றின் பெயரைப் பெற்று இருந்தது. இம்மாவட்டம் பிரிஸ்டல், பாத், மற்றும் ஏவான் பள்ளத்தாக்கின் கீழமைந்த பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.
பாதை
தொகுஅக்டோன் துர்வில்லே என்னும் ஊருக்கு வடக்கே தென் க்ளோஷெஸ்டெர்ஷேரில் சியப்ரி நகரின் கிழக்கே ஏவான் ஆறு தோன்றுகிறது[4]. இந்த ஆறு, வில்ட்ஷயர் வழியாக, அந்தப் பகுதியின் கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் பாய்வதன் மூலம் ஓரளவு வட்டப் பாதையில் ஓடுவதாக அமைந்துள்ளது. அதன் முதல் முக்கிய குடியேற்றம் வில்ட்ஷயர் எல்லையில் இருந்து இரண்டு மைல்கள் (3 கி.மீ.) உள்நோக்கியிருக்கும் லக்கிங்டன் கிராமம் ஆகும். அதன் பின்னர் ஷெர்ஸ்டனில் குடியேற்றம் ஏற்பட்டது. கிளூஷெஸ்டெர்ஷையரில் இருக்கும் டெட்பரியின் வடக்குப் பகுதியில் தொடங்கும் டெட்பரி ஏவான் எனப்படும் அதன் முதல் பெரிய கிளையாற்றுடன் மல்மேஸ்பரி என்ற இடத்தில் இணைகின்றது. இந்த துணை ஆறு பண்டைய ஆங்கிலத்தில் 'ஆங்கில நதி' என்று பொருள்படும் இக்லெர்பர்ன் என்ற பெயரால் உள்ளூரில் அறியப்படுகிறது. இங்கே இரண்டு ஆறுகள் ஒன்றையொன்று சந்தித்தாலும்[5], அவற்றின் பாதையை கோத்சவ்வ்ல்ட்ஸ் என்ற ஒரு பாறை தடுக்கிகிறது. இதனால், கிட்டத்தட்ட ரி பண்டைய மலைப் பாங்கான நகரமான மல்மேஸ்பரி ஒரு தீவு போன்று அமைகிறது. இந்த ஆறுகள் சந்திக்கும் இடத்திற்கு முன்னர், டெபரி கிளையில் இருந்து வேறுபடுத்துவதற்காக, ஏவான் ஆறானது நீரை சில நேரங்களில் ஏவான் ஆறு ஷெர்ஸ்டன் கிளை என அழைக்கப்படுகிறது.[6]
இரண்டு ஆறுகள் ஒன்றிணைந்த பிறகு, ஏவான் ஆறானது கோத்சவ்வ்ல்ட்ஸ் இலிருந்து வெளி நோக்கித் தென்கிழக்குத் திசையிலும், பின்னர் தெற்குத் திசையிலும் பாய்ந்து, களிமண் நிறைந்த டன்ட்சே பள்ளத்தாக்குக்கினுள் விழுகின்றது. அங்கு மாடன் ஆறு என்னும் ஆற்றுடன் இணைந்து, பின்னர், மிகப்பெரிய நகரமான சிபன்ஹேம் ஐ அடைகின்றது. அந்தப் பரந்த பள்ளத்தாக்கு இப்போது ஏவான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. ஆறானது தொடர்ந்து நாக்லாக் என்னும் இடத்தினூடாக மெல்ஸ்காம் வரை பாய்கிறது. பின்னர் வடமேற்குத் திசையில் திரும்பி பிராட்போர்ட் ஒன் ஏவான் என்னும் நகரத்தின் ஊடாகப் பாய்கின்றது. அந்த நகரத்தில் நடுப்பகுதியில் இந்த ஆற்றின் மிக அகலாம ஆழம் மிகவும் குறைந்த பகுதி இருக்கின்றது. இதனாலேயே இந்த நகருக்கு பிராட்போர்ட் (Broad - Ford) என்னும் பெயர் கிடைத்தது. இந்த ஆற்றைச் சுற்றியே இந்த நகரத்தின் வளர்ச்சி அமைந்திருந்தது. நோர்மானியர் காலத்தில், இந்த ஆற்றின் ஆழம் குறைந்த இடத்தில் கட்டப்பட்ட கல்லினால் ஆன பாலம் தற்போதும் இருக்கின்றது. நோர்மானியரால் கட்டப்பட்ட பாலத்தின் பகுதி நீரோட்டத்தின் திசைக்கு எதிர்த் திசையில் கூரான வளைவுகளைக் கொண்ட அமைப்பாகவும், மறு திசையில் உள்ள புதிய வளைவுகள் வளைவான அமைப்பைக் கொண்டதாகவும் உள்ளன. நகர பாலம் மற்றும் தேவாலயம் தரம் ஒன்றில் பட்டியலிடப்பட்ட கட்டிடமாகும். இந்தப் பாலம் முதலில், குதிரைகளில் பாரம் ஏற்றிக் கொண்டு செல்லப் பயன்படுவதாக அமைக்கப்பட்டு இருந்தாலும், பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் மேற்கு பக்கத்தை மீண்டும் கட்டியதன் மூலம் விரிவாக்கப்பட்டது. பாலத்தின் மீது ஒரு சிறிய கட்டிடம் உள்ளது. இது முதலில் ஒரு தேவாலயமாக இருந்தது. பின்னர் இது ஒரு நகரச் சிறையாகப் பயன்படுத்தப்பட்டது.
கழிமுகம்
தொகுஆறானது கழிமுகத்தை அடையும் முன்னர், சீ மில்ஸ் என்ற இடத்தில் டிரிம் ஆற்றுடன் இணைகிறது. சீ மில்ஸ் என்ற இடமே போர்ட்ஸ் அபோனா என்று அழைக்கப்பட்ட ஒரு ரோமன் துறைமுகத்தைக் கொண்டிருந்தது. சீ மில்ஸ் என்ற இடத்தைக் கடந்தவுடன், ஏவான் ஆறானது அதன் தெற்குக் கரையில், பில் என்ற கிராமத்தைக் கடந்து பாய்ந்து செல்கின்றது. இந்த பில் என்ற இடமானது கப்பல்கள், தோணிகள், படகுகள் போன்றவை நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருக்கின்றது. பின்னர் எம்5 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏவான் மவுத் பாலத்தின் கீழாக ஓடுகின்றது. இந்தப் பாலத்தில், ஆற்றின் அகலம் 538 அடியாகவும் (164 மீ), பாலத்தின் நீளம் 4,554 அடியாகவும் (1,388 மீ) இருப்பதுடன், பாலமானது ஆற்றின் நீர்மட்டத்திலிருந்து, 98.4 அடி (30 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. கழிமுகத்தில் ஆறானது இரண்டு பெரிய கப்பற்தளங்களைக் கொண்டுள்ளது.
ராயல் போர்ட்ஸ்பரி துறைமுகமானது ஆற்றின் வாயிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆழமான நீர்ப்பகுதியைக் கொண்ட இந்தத் துறைமுகமானது 1972 - 1977 ஆண்டுப் பகுதியில் கட்டப்பட்டது. இப்போது இந்தத் துறைமுகம் மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் ஒரு முக்கிய துறைமுகமாக உள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள துறைமுகங்களில், இதுவே மிகப் பெரிய வாயிலைக் கொண்ட துறைமுகமாக உள்ளது. 41 மீ (135 அடி) உத்தரப் பகுதி (beam), 290 மீ (951 அடி) நீளம் 14.5 மீ (48 அடி) draft கொண்ட பெரிய கப்பல்களைக் நிறுத்தக் கூடிய துறைமுகமாக இது அமைந்துள்ளது.
ஏவான்மவுத் துறைமுகமானது ஆற்றின் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற குளிர் பாதுகாப்புக் கொடுக்கப்படும் உணவு வகைகளை இறக்கும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருக்கின்றது. ஏவான்மவுத்தில் முதன் முதலில், 1877 இல் திறக்கப்பட்ட துறைமுகம் ஏவான்மவுத் பழைய துறைமுகம் ஆகும். இது 1884 இல், பிரிஸ்டல் கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்டது. 1907 ஆம் ஆண்டில், பெரிய துறைமுகமான ராயல் எட்வர்ட் துறைமுகம் திறக்கப்பட்டது.
பிரிஸ்டல் துறைமுகங்களில் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவை பிரிஸ்டல் நகர கவுன்சிலுக்கான, பிரிஸ்டல் துறைமுக ஆணையமானது 1991 வரை இந்தத் துறைமுகங்களை இயக்கி வந்தது. பின்னர் அது பிரிஸ்டல் துறைமுக நிறுவனத்திற்கு 150 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்
தொகு- ↑ "The Bristol Avon Catchment Abstraction Management Strategy" (PDF). Environment Agency. p. 4. Archived from the original (PDF) on 29 February 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
- ↑ Fisiak, Jacek (1997). Linguistic Reconstruction and Typology. Mouton de Gruyter. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-014905-0.
- ↑ Miller, D. Gary (2 August 2012). External Influences on English: From its Beginnings to the Renaissance. Oxford: Oxford University Press. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965426-0.
- ↑ "River Avon". Information Britain. Archived from the original on 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
- ↑ Ordnance Survey 1:25,000 scale Explorer map sheet 168 Stroud, Tetbury & Malmesbury
- ↑ Ordnance Survey 1:25,000 scale Explorer map series sheet no 168 Stroud, Tetbury & Malmesbury